மலேசியாவில் நாளுக்கு நாள் கிருமித்தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொடுவதால், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் முழு முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் 14ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து சமூக, பொருளியல் நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் முகைதீன் யாசின் இன்று (மே 28) தெரிவித்தார்.
மற்றோர் உச்சமாக இன்று ஒரே நாளில் 8,290 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிகவும் அத்தியாவசியமான பொருளியல் மற்றும் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

