கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8,290 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 549,514க்கு அதிகரித்துள்ளது.
மலேசியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் அரசாங்க மருத்துவமனைகளில் கொவிட்-19க்கு எதிராகப் போராடி வரும் முன்கள ஊழியர்களின் படங்களை ஃபேஸ்புக்கில் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் வெளியிட்டிருந்தார்.
"இந்தப் படங்கள் ஆயிரம் வார்த்தைகளைப் பேசுகிறது," என்று படங்களுக்கு டாக்டர் ஹிஷாம் தலைப்பிட்டிருந்தார்.
மலேசியாவிேல சிலாங்கூர் மாநிலத்தில் தொடர்ந்து கிருமித் தொற்று அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 2,052 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்ததாக கிளந்தானில் 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கோலாலம்பூரில் 830 புதிய சம்பவங்களும் ஜோகூரில் 762 சம்பவங்களும் சரவாக்கில் 698 சம்பவங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

