மலேசியாவில் ஒரே நாளில் 8,290 பேருக்குத் தொற்று

மலேசியாவில் ஒரே நாளில் 8,290 பேருக்குத் தொற்று

1 mins read
7cbd20d1-1659-4b40-ad64-3081964688ec
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் நேற்று ஒரே நாளில் மட்­டும் 8,290 பேர் கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இவர்­க­ளு­டன் சேர்த்து மொத்­தம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 549,514க்கு அதி­க­ரித்­துள்­ளது.

மலே­சி­யா­வில் தொடர்ந்து நான்­கா­வது நாளாக நேற்று தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

இந்த நிலை­யில் அர­சாங்க மருத்­து­வ­ம­னை­களில் கொவிட்-19க்கு எதி­ரா­கப் போராடி வரும் முன்­கள ஊழி­யர்­க­ளின் படங்­களை ஃபேஸ்புக்­கில் சுகா­தா­ரத் துறை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் வெளி­யிட்­டி­ருந்­தார்.

"இந்­தப் படங்­கள் ஆயி­ரம் வார்த்­தை­க­ளைப் பேசு­கிறது," என்று படங்­க­ளுக்கு டாக்­டர் ஹிஷாம் தலைப்­பிட்­டி­ருந்­தார்.

மலே­சி­யா­விேல சிலாங்­கூர் மாநி­லத்­தில் தொடர்ந்து கிரு­மித் தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. அந்த மாநி­லத்­தில் மட்­டும் நேற்று ஒரே நாளில் 2,052 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இதற்கு அடுத்­த­தாக கிளந்­தா­னில் 851 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் 830 புதிய சம்­ப­வங்­களும் ஜோகூ­ரில் 762 சம்­ப­வங்­களும் சர­வாக்­கில் 698 சம்­ப­வங்­களும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.