மியன்மாரில் 28 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

மியன்மாரில் 28 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

1 mins read
7eb04959-ba5a-48a8-9e8e-7e867b31ccc3
-

யங்­கூன்: மியன்­மா­ரில் சீனா­வின் தொழிற் சாலை­க­ளுக்கு தீ மூட்­டிய 28 பேருக்கு இரு­பது ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த மார்ச் மாதம் பதற்­ற­மான சூழ்­நி­லை­யில் யங்­கூ­னில் சீனா­வின் உத­வி­யு­டன் செயல்­படும் தொழிற்­சா­லை­க­ளுக்கு ராணுவ எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டக்­ கா­ரர்­கள் தீ வைத்­த­னர்.

மியன்­மா­ரின் மிகப்­பெ­ரிய நக­ர­மான ஹிலைங் தர்­யா­ரில் உள்ள காலணி, ஆடை­க­ளைத் தயா­ரிக்­கும் வச­தி­களை குற்­ற­வா­ளி­கள் குறி வைத்­த­தாக ராணு­வத்­தின் ஊட­க­மான 'மிய­வாடி' தெரி­வித்­தது.

ராணுவ எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கலைக்க ராணு­வம் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­யது. இதில் பத்­துக்­கும் மேற்­பட்­டோர் மாண்­ட­னர். பலர் காயம் அடைந்­த­னர். இதை­ய­டுத்து ராணு­வச் சட்­டம் அம­லாக்­கப்பட்­டது.

இந்த நிலை­யில் வேண்­டு­மென்றே தீ மூட்­டப்­பட்ட சம்­ப­வத்­தில் சீனர்­கள் பலர் சிக்கி காயம் அடைந்­த­தாக மியன்­மா­ரில் உள்ள சீனத் தூத­ர­கம் தெரி­வித்­தது.

சீனா­வின் சொத்­து­க­ளை­யும் குடி­மக்­க­ளை­யும் பாது­காக்­கு­மாறு சீன அதி­கா­ரி­கள் வேண்­டு­கோள்­வி­டுத்­த­னர்.

ஏறக்­கு­றைய சீனா­வின் முத­லீட்­டில் செயல்­படும் 32 தொழிற்­சா­லை­கள் நாச­மாக்­கப்­பட்­டன. இத­னால் 240 மில்­லி­யன் யுவான் (S$50 மில்­லி­யன்) இழப்பு ஏற்­பட்டு உள்ளது என்று சீனா­வின் குளோ­பல் டைம்ஸ் மார்ச்­சில் தெரி­வித்­தது. கடந்த பிப்­ர­வரி 1ஆம் தேதி ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தைக் கவிழ்த்த ராணு­வத்­துக்கு சீனா ஆத­ர­வாக இருந்து வரு­வ­தாக மியன்­மார் மக்­கள் நம்­பு­கின்­ற­னர். இதன் கார­ண­மா­கவே சீனா­வின் தொழிற்­சா­லை­கள் அடித்து நொறுக்­கப்­பட்­டன.