கிருமி உருவானது குறித்து மீண்டும் விசாரணை தேவை

கிருமி உருவானது குறித்து மீண்டும் விசாரணை தேவை

2 mins read
436a6c0e-45d4-4a10-9e89-52b672d01ea5
-

உலக சுகாதார நிறுவனத்திடம் அமெரிக்கா வலியுறுத்து

ஜெனீவா: கொவிட்-19 கிரு­மி­யின் மூலத்­தைக் கண்­ட­றிய இரண்­டா­வது கட்ட விசா­ர­ணையை மேற் கொள்ள வேண்­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னத்தை அமெ­ரிக்கா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அதற்கு சீனா மாதி­ரி­க­ளை­யும் தர­வு­க­ளை­யும் வழங்கி முழு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும் என்று அது கேட்டுக்கொண்டது.

கடந்த ஜன­வரி-பிப்­ர­வ­ரி­யில் சீனா­வில் உள்ள வூஹான் நக­ருக்­குச் சென்ற உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் குழு அங்கு நான்கு வாரங்­க­ளாக முகா­மிட்டு கிருமி உரு­வா­னது குறித்து விசா­ரணை நடத்­தி­யது. பின்­னர் மார்ச்­சில் ெவளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில் வவ்­வா­லி­லி­ருந்து மற்­றொரு விலங்கு மூலம் மனி­தர்­க­ளுக்கு கிருமி பர­வி­யி­ருக்­க­லாம் என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் குழு தெரி­வித்­தது. வூஹான் ஆய்­வ­கத்­தி­லி­ருந்து கிருமி வெளி­யே­றி­யி­ருக்­க­லாம் என்­ப­தற்­கு ஆதா­ர­மில்லை என்­றும் குழு சொன்­னது.

ஆனால் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் முதற்­கட்ட விசா­ரணை போது­மா­ன­தாக இல்லை, உறு­தி­யற்­ற­தாக உள்ளது என்ற அமெ­ரிக்கா, இரண்­டா­வது கட்ட விசா­ரணை ேதவை என்று குறிப்­பிட்­டது. அத்­த­கைய விசா­ரணை சீனாவை உள்­ள­டக்கி வெளிப்­ப­டை­யான, ஆதா­ரங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு இருக்க வேண்­டும் என்று அமெ­ரிக்கா கண்­டிப்­பு­டன் தெரி­வித்­தது.

இதற்கு வழக்­கம்­போல எதிர்ப்பு தெரி­வித்­துள்ள அமெ­ரிக்­கா­வில் உள்ள சீன தூத­ர­கத்­தின் பிர­தி­நிதி ஒரு­வர், உல­கம் முழு­வ­தும் ஆரம்­பக்­கட்ட கொவிட்-19 சம்­ப­வங்­களை முழு­மை­யாக விசா­ரிக்­க வேண்­டும் என்­றும் உல­கின் பல இடங்­களில் உள்ள ரசா­யன சோத­னைச் சாலை­கள் மற்­றும் ரக­சிய தளங்­களில் விசா­ரணை நடத்த வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ளார்.

இந்த நிலை­யில் உலகம் முழு­வ­தும் பரவி மக்­க­ளின் வாழ்க்­கையை தலை­கீ­ழா­கப் புரட்டி போட்­டுள்ள கொவிட்-19 கிருமி உரு­வான இடத்­தைக் கண்­ட­றிய தனது உள­வுத் துறைக்கு அமெரிக்க அதி­பர் பைடன் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

சீனா­வில் உள்ள சோத­னைச்­சா­லை­யி­லி­ருந்து கிருமி வெளி­யேறி­யி­ருக்­கும் சாத்­தி­யத்தை ஆராய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.