மலேசியாவில் புதிய உச்சமாக மேலும் 9,020 பேருக்கு கிருமித்தொற்று இன்று (மே 29) உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கிருமிப் பரவல் தொடங்கியது முதல் ஒரே நாளில் இத்தனை பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
மலேசியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஜூன் 1 முதல் 14ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு முடக்கநிலை அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் நேற்று (மே 28) அறிவித்தார். அதன்படி, அத்தியாவசிய சேவை துறைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.

