அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கு தடையை நீட்டித்துள்ள இந்திய அரசு

அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கு தடையை நீட்டித்துள்ள இந்திய அரசு

1 mins read
374e4179-83e5-4f89-ad56-35f17ce80bbd
-

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தீவிரம் இன்னமும் குறையாததால் அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது.

அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை இந்தத் தடை நீட்டிக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்தது.

ஆனால் அனைத்துலக அளவிலான சரக்கு விமானப் போக்குவரத்துக்கு இந்தத் தடை பொருந்தாது.

'வந்தே பாரத்' விமானச் சேவைகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாதடைகிருமித்தொற்று