மணிலா: தென்சீனக் கடலில் உள்ள தனது எல்லைக்கு உட்பட்ட தீவின் அருகே சீனா 'சட்ட விரோத' நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிலிப்பீன்ஸ் கூறியுள்ளது.
திட்டு தீவின் அருகே சீனக் கப்பல்களும் மீன்பிடி படகுகளும் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து கடந்த வெள்ளிக் கிழமை பெய்ஜிங்கிடம் அரசதந்திர ரீதியாக எதிர்ப்பு தெரிவித்ததாக மணிலா கூறியது.
சீனா அக்கப்பல்களை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியது.
அதே வேளையில் சர்ச்சைக்குரிய பகுதி தனது எல்ைலக்கு உட்பட்டது எனவும் அதன் மீதான "அரசுரிமையை நிலைமாறாமல் பாதுகாக்கப் போவதாகவும்" சீன ராணுவத்தின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார். அத்தீவில் பிலிப்பீன்ஸ் மேற்கொள்ளும் மேம்பாட்டுப் பணிகளை சீனா எதிர்ப்பதாகவும் பேச்சாளர் கூறினார்.
சீனக் கப்பல்களும் மீன் பிடிப்படகுகளும் கடந்த இரண்டு மாதங்களாக திட்டு தீவின் அருகே அடிக்கடி சென்று வருவதைத் தொடர்ந்து அந்நாட்டுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
சீன ராணுவம் அக்கப்பல்களை இயக்குவதாக பிலிப்பீன்ஸ் சந்தேகப்படுகிறது.