செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
69469a1b-d0ee-4086-9912-0c7ec6441e43
-

 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த இலகு ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களில் ஐந்து பேர் மட்டுமே மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இலகு ரயில் கட்டமைப்பை நடத்தும் பிரசாரனா போக்குவரத்து நிறுவனம் அதனைத் தெரிவித்தது. விபத்தில் காயமுற்ற மேலும் 62 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை விபத்து நிகழ்ந்தபோது ரயிலில்

213 பேர் இருந்தனர். அவர்களில் 83 பேரை இன்னும் அடையாளம் காணவில்லை என்று நிறுவனம் தெரிவித்தது.

 தைவானில் கொவிட்-19 கிருமியால் மாண்டவர்கள் எண்ணிக்கை ெதாடர்ந்து இரண்டாவது நாளாக அதிகமானது. அங்கு நேற்று 21 மரணங்கள் பதிவானதாக தைவானின் நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் கூறியது. புதிதாக 486 பேருக்கு நோய் தொற்றியது. தைவானில் கடந்த இரண்டு வாரங்களாக நோய்ப்பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பில் உள்ளபோதும் தொற்று குறையவில்லை.

 பெலரூஸுக்கும்

ரஷ்யாவுக்கும் இடையிலான நெருக்கமான இரு நாட்டு உறவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பாராட்டியுள்ளார். பெலரூஸ் அதிபர் அலெக்சாண்டர் லுஷான்கோவுக்கு வரவேற்பளித்தபோது அவர் அவ்வாறு கூறினார். இந்நிலையில் பெலரூஸ் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக மீண்டும் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஐரோப்பிய விமானம் ஒன்றை பெலரூஸ் தலைநகர் மின்ஸ்க்குக்கு திருப்பி அதில் இருந்த எதிர்தரப்பு செய்தியாளரை பெலரூஸ் கைது செய்ததை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.