இஸ்லாமிய பெண் போதகர்களை அவமதிக்கும் கருத்துக்கணிப்பு அகற்றப்பட்டது

இஸ்லாமிய பெண் போதகர்களை அவமதிக்கும் கருத்துக்கணிப்பு அகற்றப்பட்டது

1 mins read
76a6c161-d395-4824-a70a-5125ce923c12
-

இஸ்லாமிய பெண் போதகர்களைப் பாலியல் நோக்கத்துடன் பிரதிபலிக்க முற்படும் இணைய கருத்துக்கணிப்பு மீவீ சமூக ஊடகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை போலிசார் விசாரித்து வருவதாகக் கூறிய மீவீயின் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைவர் திரு டேவிட் வெஸ்ட்ரிட்ஜ்,கருத்துக் கணிப்பை வெளியிட்டவர் அவராகவே அதனை அகற்றியிருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை உஸ்தாஸ் முகம்மது சாகிட் முகம்மது ஸின் இதனைச் சுட்டிக் காட்டியபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. 12 பெண் போதகர்களைக் குறிப்பிடும் அந்தக் கருத்துக்கணிப்பில் இவர்கள் கவர்ச்சி மதிப்பிடப்பட்டது. 1,0005 மீவீ பயனீட்டாளர்கள் பங்கேற்ற இந்தக் கருத்துக்கணிப்பால் சம்பந்தப்பட்ட பெண் போதகர்களுக்கு பெரும் கவலை ஏற்பட்டிருப்பதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்தது.