மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று இதுவரையில்லாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் புதிதாக 9,020 பேருக்கு கிருமித்தொற்றும் 63 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை முதல் பிரதமர் முகைதீன் யாசின் இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டை அறிவித்ததை அடுத்து இந்த புள்ளிவிவரங்கள் வெளிடப்பட்டுள்ளன.
தற்போது கவலைக்கிடமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
நோய்ப்பரவலின் வேகம் ஒரு நாளில் 13,000 பேர் வரை அதிகரிக்கலாம் என அந்நாட்டின் சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

