தடுப்–பூசி போட்–டுக்–கொள்–வோர் அதி–க–ரிப்பு

மெல்­பர்ன்: தடுப்­பூசி போட்­டுக் கொள்­வ­தில் ஆர்­வம் காட்­டா­மல் இருந்த ஆஸ்­தி­ரே­லிய மக்­கள், தற்­போது தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முனைப்பு காட்­டு­வ­தாக ஆஸ்­தி­ரே­லிய ஊட­கம் ஒன்று கூறி­யுள்­ளது.

விக்­டோ­ரி­யா­வில் கிரு­மிப் பர­வல் மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ள­தால், தடுப்­பூ­சி­யின் தேவையை மக்­கள் உணர்ந்­துள்­ள­தா­கக் கூறப்­

ப­டு­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்­ணிக்கை குறிப்­பி­டத்­தக்க அளவு உயர்ந்­துள்­ள­தாக மத்­திய சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் வரை­யி­லான சென்ற வாரத்­தில் சுமார் 337,765 பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். அதற்கு முந்­திய வாரம் இந்த எண்­ணிக்கை 293,836ஆக இருந்­தது.

விக்­டோ­ரியா மாநி­லத்­தில் மட்­டு­மல்­லா­மல் நியூ சவுத் வேல்ஸ், குவீன்ஸ்­லாந்­தி­லும் தடுப்­பூ­சிக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ள­தாக மருத்­து­வர் கரேன் பிரைஸ் கூறி­யுள்­ளார்.

பலர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­வந்­தா­லும் ஆஸ்ட்­ரா­ஸெ­னிகா போட்­டுக்­கொள்­ளக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருப்­ப­தால், பைஃ­சர் தடுப்­பூ­சிக்­காக காத்­தி­ருக்க தயங்­க­வில்லை என்­றும் அந்த ஊடகச் செய்தி கூறு­கிறது.

வரும் வாரங்­களில் இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே முதி­யோர் பரா­ம­ரிப்பு இல்ல ஊழி­யர் ஒரு­வர் உட்­பட ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா நக­ரில் நேற்று ஐந்து பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

மூத்­தோர் பரா­ம­ரிப்பு இல்ல ஊழி­ய­ருக்கு எவ்­வாறு கிரு­மித் தொற்­றி­யது என்­பது இன்­னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்று சுகா­தார அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பரா­ம­ரிப்பு இல்­ல­வா­சி­கள் தங்­கள் அறை­களில் தனி­மைப்­ப­டுத்தப் பட்­டுள்­ள­னர். இல்­ல­வா­சி­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோ­ருக்­கும், அதன் ஊழி­யர்­க­ளில் மூன்­றில் ஒரு பங்கினருக்கும் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

வெளி­நாட்­டி­லி­ருந்து திரும்­பிய ஒரு­வ­ருக்­குத் தனி­மைப்படுத்­தல் காலம் முடிந்த பிறகு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்பட்­ட­தைத் தொடர்ந்து விக்­டோ­ரி­யா­வில் மீண்­டும் கிரு­மி­ ப­ர­வல் தலை­தூக்­கி­யது.

வெளி­நாட்­டி­லி­ருந்து திரும்­பிய

வரோடு நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­யில் கிட்­டத்­தட்ட 70 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தொற்று இல்லை என்று முடிவு வந்­துள்­ள­தாக மாநில தற்­கா­லிக தலை­வர் ஜேம்ஸ் மெர்­லினோ தெரி­வித்­துள்­ளார்.

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக கடந்த வியா­ழன் முதல் அங்கு ஒரு வார கால முழு முடக்­கம் நடை

முறைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மீண்­டும் கிரு­மிப் பர­வல் எதி­ரொலி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!