மலே-சியா: கடைத்-தொ-கு-தி-கள், தொழிற்-சா-லை-கள் செயல்-ப-டாது

மலே-சியா: கடைத்-தொ-கு-தி-கள், தொழிற்-சா-லை-கள் செயல்-ப-டாது

1 mins read
09d93a6e-415c-435b-af5b-5510037342c6
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் நாளை முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள இரண்டுவார கால முடக்க உத்­த­ர­வின்­போது பெரும்­பா­லான கடைத்­தொ­கு­தி­கள் மற்­றும் தொழிற்­சா­லை­கள் மூடப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கா­லகட்­டத்­தில் 17 முக்­கிய துறை­கள் மட்­டுமே செயல்­பட அனு­ம­திக்­கப்­படும் என்று பாது­காப்­புக்­கான மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நேற்று கூறி­னார்.

அத்­தி­யா­வ­சிய உற்­பத்தி தொழிற்­சா­லை­கள் 60 விழுக்­காட்டு கொள்­தி­ற­னு­டன் மட்­டுமே செயல்­பட அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

உணவு, பான வர்த்­த­கம் (வாங்­கிச் செல்­வது மட்­டும்), போக்கு

வரத்து, வங்கி, ஊட­கங்­கள், தொலைத்­தொ­டர்பு, அஞ்­சல் சேவை உள்­ளிட்­டவை செயல்­படும்.

அனு­ம­திக்­கப்­பட்ட துறை­களும் காலை எட்டு முதல் இரவு எட்டு மணி வரை மட்­டுமே இயங்­கும்.

தங்­க­ளது வீடு இருக்­கும் பகு­தி­யில் இருந்து 10 கி.மீ. சுற்­ற­ள­விற்­குள் சென்று வரு­வ­தற்கு மட்­டுமே மக்கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். அத்­தி­யா­வ­சியப் பொருட்­கள் வாங்­கு­வ­தற்­காக வீட்டிற்கு இரு­வர் மட்­டுமே வெளியே செல்ல முடி­யும்.

"ஊர­டங்கு கிடை­யாது, ஆனால் யாரும் வெளியே வர­மாட்­டார்­கள் என்று நம்­பு­கி­றேன், ஏனெ­னில் இரவு 8 மணிக்­குப் பிறகு பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­கள் எது­வும் இருக்­காது," என்று இஸ்­மா­யில் கூறி­னார். பெரும்­பா­லான பொரு­ளா­தா­ர துறை­களை மூடு­வ­தால் வேலைக்­காக வெளியே செல்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 15 மில்­லி­ய­னி­லி­ருந்து 1.5 மில்­லி­ய­னா­கக் குறை­யும் என்­றும் அவர் கூறி­னார்.