எவரெஸ்ட் மலையேறிய பார்வையற்ற முதல் ஆசிய ஆடவர்
காட்மாண்டு: எவரெஸ்ட் மலையேறிய முதல் பார்வையற்ற ஆசியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 46 வயது, சீன ஆடவரான ஸாங் ஹாங். உலகளவில் எவரெஸ்ட் மலையேறிய மூன்றாவது பார்வையற்றவராகவும் இவர் திகழ்கிறார். மூன்று வழிகாட்டிகளின் உதவியோடு நேப்பாளத்தில் உள்ள 8,849 மீட்டர் உயர எவரெஸ்ட் உச்சியை மே 24ஆம் தேதி திங்கட்கிழமையன்று அடைந்தார்.
ஃபுளோரிடா துப்பாக்கி சூடு: இருவர் பலி
மயாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடாவின் ஹியாலியாவில் ஒரு பில்லியர்ட்ஸ் மையத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மாண்டனர். பலர் காயமடைந்தனர்.
வெள்ளை நிற கார் ஒன்றிலிருந்து கையில் ஆயுதங்கள்,
துப்பாக்கிகளோடு இறங்கிய மூவர், இசை நிகழ்ச்சி
ஒன்றிற்காக கூடியிருந்த கூட்டத்தை நோக்கி சுட்டதில்
இருவர் மாண்டதாக போலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
வியட்னாம்: சமூக இடைவெளி உத்தரவு
ஹனோய்: வியட்னாமின் முக்கிய நகரமான ஹோ சி மின் நகரத்தில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் சமூக இடைவெளி கட்டுப்பாடு நடைமுறைப்
படுத்தப்படும் என்று உள்ளூர் ஊடக செய்தி தெரிவிக்கிறது. சென்ற வார தொடக்கத்தில் கடைகள், உணவகங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று மேலும் 52 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்
பட்டது. உள்ளூர் அளவில் அங்கு மொத்தம் 5,406 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இதில் 3,836 சம்பவங்கள் ஏப்ரல் மாத பிற்பாதிக்குப் பிறகு கண்டறியப்பட்டவை.
இறைச்சி தொழிற்சாலை மூடல்
பேங்காக்: தாய்லாந்தின் சாபூரி மாநிலத்திலுள்ள மிகப்பெரிய இறைச்சி தொழிற்சாலை கிருமிப் பரவல் காரணமாக ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அத்தொழிற்சாலை ஊழியர்கள் 245 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மூடப்பட்டது. இந்த தொழிற்சாலையில் சுமார் 5,800 பேர் வேலை செய்வதால், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக அங்கேயே தற்காலிக மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

