தற்காலிக கொவிட்-19 மானியம் பெற ஜூன் 3 முதல் விண்ணப்பிக்கலாம்

தற்காலிக கொவிட்-19 மானியம் பெற ஜூன் 3 முதல் விண்ணப்பிக்கலாம்

1 mins read
10905493-03ca-4d84-a0ee-cbd00f22aeea
-
Google News Preferred Icon

கொவிட்-19 மீட்சி தற்காலிக மானியத்திற்கான (சிஆர்ஜி-டி) விண்ணப்பங்கள் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் கழித்து ஜூலை 2 ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள குறைந்த வருாய் மற்றும் நடுத்தர வருவாய் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக இந்தத் தற்காலிக மானியம் இடம்பெறுகிறது.

மே 16ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதிவரை சம்பளம் இல்லாத விடுப்பில் அனுப்பப்பட்ட தகுதி உள்ள ஊழியர்கள் அல்லது இதே காலகட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு மாதத்தில் பாதி வருவாயை இழந்து இருக்கும் ஊழியர்கள் இந்த மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம்.

தகுதி உள்ளவர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் தொகையாக $700 வரை கிடைக்கும்.

தற்காலிக மானியம், இப்போது நடப்பில் இருக்கும் கொவிட்-19 மீட்சி மானியத்திற்கு உறுதுணையாக இடம்பெறுகிறது.

நடப்பில் இருக்கின்ற மானியம் ஜனவரி 18ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருாய் மற்றும் நடுத்தர வருவாய் குடும்பத்தினருக்கும் சுய-தொழில் செய்வோருக்கும் உதவுகிறது.

குறிப்புச் சொற்கள்