400,000 மாணவர்களுக்கு தடுப்பூசி; முக்கிய தேர்வுகளை எழுதவுள்ளோருக்கு முன்னுரிமை

400,000 மாணவர்களுக்கு தடுப்பூசி; முக்கிய தேர்வுகளை எழுதவுள்ளோருக்கு முன்னுரிமை

1 mins read
e1167619-1b7d-464c-a72c-9bffc56e11a4
-

பன்னிரண்டு வயதுக்கும் அதற்கும் மேற்பட்ட சுமார் 400,000 மாணவர்களுக்கு, தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, வழக்கநிலை, சாதாரண நிலை, மேல்நிலை தேர்வு எழுதும் மாணவர்களும் அவற்றுக்கு ஒப்பான தேர்வுகள் எழுதும் மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலில் அழைக்கப்படுவார்கள்.

மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு நாளை (ஜூன் 1) முதல் பதிந்துகொள்ளலாம்.

வரும் வியாழக்கிழமையிலிருந்து அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்.

பிரதமர் லீ சியன் லூங் இன்று (மே 31) தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் பற்றி முதலில் அறிவித்ததைத் தொடர்ந்து கல்வி அமைச்சு அது குறித்த மேல்விவரங்களை வெளியிட்டது.

அண்மைய கொவிட்-19 பரவலில் மாணவர்களுக்கு கிருமி தொற்றிய சம்பவங்கள் அதிகமானதைத் தொடர்ந்து அவர்களுக்கான தடுப்பூசி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்