உதவி கோரும் சிறு வர்த்–த–கங்–கள் மலே–சி–யா–வில் இன்று முதல் முழு முடக்க உத்–த–ரவு

பெட்­டா­லிங் ஜெயா: இன்று முதல் அடுத்த இரண்டு வார காலத்­திற்கு நடப்­பில் இருக்­கும் முழு முடக்­கத்­திற்கு மலே­சிய சிறு வர்த்­த­கர்­கள் வர­வேற்பு தெரி­வித்­துள்­ளார்­கள்.

இருப்­பி­னும், இந்த சூழ­லைச் சமா­ளிக்க அர­சாங்­கத்­தி­டம் உத­வி­களை அவர்­கள் கோரு­கின்­ற­

னர்.

முழு முடக்­கத்­திற்கு முன்­ன­தாக அழைப்பு விடுத்­த­வர்­களில் தாங்­களும் ஒரு­வர் என்­ப­தால், முழு முடக்­கத்தை எதிர்­பார்த்­த­தாக கூறி­னார் முஸ்­லிம் உண­வக உரி­மை­யா­ளர் சங்­கத்­தின் தலை­வர் ஜவ­ஹர் அலி.

ஆனால், கடன் தவ­ணை­க­ளுக்­கான அவ­கா­சத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீட்­டிக்க வங்­கி­கள் அனு­ம­திப்­ப­தற்கு, அர­சாங்­கம் வழி செய்ய வேண்­டும் என்று அவர் வேண்­டு­கோள் விடுத்­தார்.

அன்­றாட தொழி­லா­ளி­கள், குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்கு அர­சாங்­கம் உத­வும் என்று தான் நம்­பு­வ­தாக இன்­னோர் வர்த்­த­கர் கூறி­னார்.

போது­மான பரி­சோ­த­னை­கள்

மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­யப்­ப­டு­ப­வர்­களில், தொற்று உறுதி செய்­யப்­ப­டு­வோர் விகி­தம் சுமார் 6.89 விழுக்­கா­டாக உள்­ள­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சர் ஆடம் பாபா தெரி­வித்­துள்­ளார். இது உலக சுகா­தார நிறு­வ­னம் அறி­வித்த விகி­த­மான 5 விழுக்­காடு என்­ப­தை­விட அதி­கம்.

அதா­வது, மலே­சி­யா­வில் கண்­ட­றி­யப்­ப­டாத தொற்று சம்­ப­வங்­கள் இருப்­ப­தா­க­வும் பரி­சோ­த­னை­கள் உயர்த்­தப்­பட வேண்­டும் என்­ப­தற்­கான அறி­கு­றி­யா­கும் இது.

சில மாநி­லங்­களில் இந்த விகி­தம் 10 விழுக்­காட்­டைத் தாண்­டி­விட்­ட­தா­க­வும், கிளந்­தா­னில் அதி­க­பட்­ச­மாக 11.84 விழுக்­கா­டா­க­வும் நெகிரி செம்­பி­லா­னில் 10.03 விழுக்­கா­டாக உள்­ள­தா­க­வும் ஆதாம் தெரி­வித்­தார்.

இதற்­கி­டைய, கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­முள்ள சர­வாக்­கில், மாவட்­டங்­க­ளுக்கு இடையி

லான பய­ணத்­திற்கு நேற்று நள்­ளி­ரவு முதல் தடை விதிக்­கப்­பட்­டது.

மலே­சி­யா­வில், நேற்று 6,824 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். இது சனிக்­கி­ழமை பதி­வான எண்­ணிக்­கை­யை­விட குறைவு என்­றா­லும், தீவிர சிகிச்சை பிரி­வில் உள்­ளோ­ரின் எண்­ணிக்கை 851ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக தலைமை சுகா­தார இயக்­கு­நர் நூர் ஹிஸ்­ஸாம் அப்­துல்லா கவலை தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!