டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் ஆட்சி கவிழும் சூழ்நிலை நிலவுகிறது.
பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராக பல்வேறு ஊழல் புகார்கள், குற்றச்சாட்டுகள், மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன. இவருக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுகளும் விசாரணையில் உள்ளன.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதால், அவரது ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலில் நடந்த தேர்தல்களில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், நெட்டன்யாகு காபந்து பிரதமராகத் தொடர்ந்தார்.
இந்நிலையில், அங்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தீவிர இடதுசாரி கட்சியான யாமினாவின் தலைவர் பென்னட் ஆதரவு அளித்துள்ளார்.
இதனால் எதிர்க்கட்சி கூட்டணிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான 66 இடங்கள் உள்ளன. இந்த கூட்டணியில் பிரதான கட்சியாக யாஷ் அடிட் கட்சி இருக்கும்.
இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் பென்னட் 2 ஆண்டும், லாபிட் கடைசி 2 ஆண்டும் பிரதமராக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அங்கு எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மைய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன. நாளைக்குள் இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதை தடுக்க 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நெட்டன்யாகு கூட்டணியை உடைக்க கண்டிப்பாக முயல்வார் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல் போன்ற ஒரு நாட்டில் இப்படி அனைத்துவிதமான கொள்கை கொண்ட கட்சிகளும் ஆட்சி அமைப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

