கிரு-மிப் ப-ர-வல்: பெரி-ய-ள-வி-லான பரி-சோ-த-னைக்கு வியட்-னாம் திட்-டம்

கிரு-மிப் ப-ர-வல்: பெரி-ய-ள-வி-லான பரி-சோ-த-னைக்கு வியட்-னாம் திட்-டம்

1 mins read
580ed93a-d64a-45c1-8667-33fb05e159ec
-

ஹனோய்: கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்டு வரும் நோக்­கில் பெரு­ம­ள­வி­லான கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னைக்­குத் திட்­ட­மிட்­டுள்­ளது வியட்­னாம்.

அண்­மை­யில் சம­யக் குழு­வோடு தொடர்­பு­டைய புதிய குழு­மம் அடை­யா­ளம் காணப்­பட்­ட­தைத் தொடர்ந்து, கிரு­மித்­தொற்று குழு­மங்­களை விரைந்து கண்­டு­பி­டிக்­கும் முயற்­சி­யாக இது மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

ஹோ சி மின் நக­ரத்­தில் கிறிஸ்­தவ சம­யக் குழு ஒன்­றோடு தொடர்­பு­டை­ய­வர்­களில் குறைந்­தது 125 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், அதி­கம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய வாய்ப்­புள்­ள­வர்­க­ளைக் கவ­னத்­தில் கொண்டு, நாளொன்­றுக்கு 100,000 பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ள­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்பு வியட்­னாம் கிரு­மிப் பர­வலை வெற்­றி­க­ர­மாக கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருந்­தா­லும் கடந்த சில வாரங்­க­ளாக அங்கு கிரு­மித் தொற்று வேக­மாக பரவி வரு­கிறது.

வியட்­னா­மில் இது­வரை கண்­ட­றி­யப்­பட்ட 7,000 தொற்று சம்­ப­வங்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டவை கடந்த இரண்டு வாரங்­களில் கண்­ட­றி­யப்­பட்­ட­வை­யா­கும்.