காத்மாண்டு: நேப்பாளத்தில் கிருமித்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு சுகாதார அவசர நிலை அறிவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
நேப்பாளத்தில் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு கிருமித்தொற்று கண்டறியப்படாத வகையில் அதிகம் பரவியிருக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், நேப்பாள பிரதமர் சர்மா ஒலி, வரும் நவம்பரில் தேர்தலை நடத்த நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அது கிருமிப் பரவலை மோசமாக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், தற்போதைய சூழலில், சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டால், அது அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலையும் அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.

