பெய்ஜிங்: சீனாவில் இதுவரை இரண்டு குழந்தை
கள் மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதியிருந்த நிலையில், தற்போது ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
சீன அதிபர் ஸி ஸின்பிங் கலந்துகொண்ட சந்திப்பு ஒன்றில் இந்த முடிவு எட்டப்பட்டதாக ஸின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சீனாவில் வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில பத்தாண்டுகளில் குறைந்து வருவதாகவும் 65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் இது பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் என்றும் தெரிய வந்தது.
நாட்டில் கடுமையான மக்கள் தொகை அதிகரிப்பைத் தொடர்ந்து கடந்த 1980ஆம் ஆண்டு முதல் சீனாவில் தம்பதியர் குழந்தைப் பெற்றுக்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் அது முதல் நாட்டில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து வந்தது.
இது குறித்து ஆளும் கட்சி நடத்திய உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் நாட்டில் நடைமுறையிலிருக்கும் சில முக்கிய கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிப்பது என்று கட்சித் தலைவர் கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 1950களுக்குப் பிறகு சென்ற பத்தாண்டுகளில் சீனாவின் மக்கட்தொகை மெதுவாக வளர்ச்சியஅடைந்ததாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.