சீனா-வில் தொற்று அதி-க-ரிப்பு; விமா-னங்-கள் ரத்து

சீனா-வில் தொற்று அதி-க-ரிப்பு; விமா-னங்-கள் ரத்து

1 mins read
ca50dd60-ce92-44ff-9602-5b93e5b09b22
-

பெய்­ஜிங்: கிரு­மித்­தொற்­றால் பல உலக நாடு­க­ளின் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­கள் முடங்­கிக் கிடக்­கும் நிலை­யில், கொரோனா கிருமி முத­லில் கண்­ட­றி­யப்­பட்ட சீனா­வில் கடந்த சில மாதங்­க­ளாக பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­கள் வழக்­கம் போல் இயங்கி வந்­தன.

ஆனால் திடீ­ரென்று நேற்று முன்­தி­னம் அங்கு 27 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து, அங்கு விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 7 பேர் மட்­டுமே வெளி­நாட்­டில் இருந்து திரும்­பி­ய­வர்­கள். மற்ற 20 சம்­ப­வங்­களும் உள்­ளூர் கிரு­மிப் பர­வா­லா­கும்.

சீனா­வின் குவாங்­டாங் மாநி­லத்­தின் குவாங்சோ நக­ரத்­தில் 18 பேரும், ஃபோஷன் நக­ரத்­தில் இரண்டு பேரும் தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருப்­ப­தாக அம்­மா­நில சுகா­தார அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

இப்­ப­கு­தி­களில் குறிப்­பிட்ட ஐந்து தெருக்­களில் வசிப்­ப­வர்­களை வீட்­டி­லேயே இருக்­கும்­படி மாநில அர­சாங்­கம் உத்­த­ர­விட்­டுள்­ளது. அதோடு பொழு­து­போக்கு இடங்­களும் சந்­தை­களும் மூடப்­பட்­டன.

அண்­மைய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் இந்­தி­யா­வில் முத­லில் கண்­ட­றி­யப்­பட்ட உரு­மா­றிய கிருமி வகை­யைச் சேர்ந்­தது என்று நக­ரின் நக­ராட்சி சுகா­தார ஆணை­யத்­தின் துணை இயக்­கு­னர் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து குவாங்சோ அனைத்­து­லக விமா­ன­நி­லை­யத்­தில் சுமார் 519 விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டன.

உல­க­ளா­விய தொற்­று­நோய் பர­வ­லுக்கு மத்­தி­யி­லும் உல­கின் பர­ப­ரப்­பான விமான நிலை­ய­மாக செயல்­பட்டு வந்த குவாங்சோ விமான நிலை­யம் கடந்த ஆண்டு சுமார் 43.8 மில்­லி­யன் பய­ணி­க­ளைக் கையாண்­டது.