போதைப்பொருள் கடத்தல்: மலேசியா முறியடிப்பு

போதைப்பொருள் கடத்தல்: மலேசியா முறியடிப்பு

2 mins read
0fe4277a-a859-4582-a73d-64e9fd14b60a
தீய­ணைப்­புச் சாத­னங்­களில் போதைப்­பொ­ருட்­களை மறைத்து வைத்து, குளி­ரூட்­டப்­பட்ட லாரி­க­ளின் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு அனுப்­பப்­படவிருந்த போதைப்பொருட்கள். இந்தக் கடத்தல் சம்பவத்தை ஜோகூர் பாரு போலிஸ் முறிடியத்தது. இது தொடர்பாக 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படம்: மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு -

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு பெரிய அள­வில் போதைப்­பொ­ருள் கடத்தப்படவிருந்தது. அந்தச் சம்பவத்தை மலே­சிய போலிஸ் முறி­ய­டித்­துள்­ளது.

அந்­தக் கடத்­தல்­கா­ரர்­கள் தீய­ணைப்­புச் சாத­னங்­களில் பதுக்கி அந்­தப் போதைப்­பொ­ருட்­க­ளைக் கடத்த இருந்­த­னர்.

தீய­ணைப்­புச் சாத­னங்­களில் போதைப்­பொ­ருட்­களை மறைத்து வைத்து, குளி­ரூட்­டப்­பட்ட லாரி­க­ளின் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு அனுப்­பப்­பட்­ட­போது பிடி­பட்­ட­தாக மலே­சி­யா­வின் போலிஸ் தலை­வர் அயோப் கான் மைதீன் பிச்சை நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூரின் மத்திய போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு மலே­சி­யா­வின் புக்­கிட் அமான் போதைப்­பொ­ருள் குற்­ற­வி­யல் புல­னாய்­வுத்­துறை மற்­றும் ஜோகூர் போலிஸ் துறை ஆகி­யோ­ரி­டம் இந்த கடத்­தல் குறித்த தக­வலை உள­வுத்­துறை தெரி­வித்­த­தை­ய­டுத்து இந்த சட்­ட­வி­ரோ­தச் சம்­ப­வம் முறி­ய­டிக்­கப்­பட்­ட­தாக திரு அயோப் கான் தெரி­வித்­தார்.

இந்­தக் கடத்­தல் கும்­பல் மலே­சி­யா­வில் இருந்து அண்டை நாடு­க­ளுக்­குப் போதைப்­பொ­ருள் கடத்­து­வ­தையே தொழி­லா­கக் கொண்­டுள்­ளது. அது கடந்த மூன்று மாதங்­க­ளாக இது­போன்ற சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தாக நம்­பப்­ப­டு­கிறது என திரு அயோப் கான், ஓர் அறிக்­கை­யின் மூலம் தெரி­வித்­துள்­ளார். ஜோகூர் பாருவில் மே மாத இறு­தி­யில் நடத்­தப்­பட்ட அதி­ர­டிச் சோத­னை­களில் சட்­ட­வி­ரோ­தச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக ஒன்­பது பேர் கைது செய்­யட்­டுள்­ள­தாக ஜோகூர் காவல்­து­றைத் தலை­வர் நேற்று தெரி­வித்­தார். அவர்­களில் மலே­சி­யா­வைச் சேர்ந்த ஏழு ஆண்­களும், ஒரு பெண்­ணும் அடங்­கு­வர். கைது­ செய்­யப்­பட்ட இன்­னொ­ரு­வர் இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்­த­வர்­. இவர்­கள் அனை­வ­ரும் 26 வயது முதல் 40 வய­துக்­குள்­ளா­ன­வர்­கள்.

கடத்­தல் கும்­ப­லி­டம் இருந்து கைப்­பற்­றப்­பட்ட போதைப் பொருட்­க­ளின் மதிப்பு 215,000 (S$67,800) ரிங்­கிட்­டைத் தாண்­டும் என்று புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அந்­தப் போதைப்­பொ­ருட்­களில் 7 கிலோ கஞ்சா, 4.5 கிலோ கிறிஸ்­டல் மெதம்­ஃபெ­ட­மின் மற்­றும் சுமார் 3 கிலோ ஹிரோ­யின் ஆகி­யவை அடங்­கும். அந்­தக் கும்­ப­லி­டம் இருந்து கைப்­பற்­றப்­பட்ட பொருட்­களில் 8 வாக­னங்­கள், பணம், நகை­கள் ஆகி­ய­வை­யும் அடங்­கும்.

போதைப்­பொ­ருள் கடத்தல் குற்றத்திற்கு மலே­சி­யா­வில் மரண தண்­டனை விதிக்­கப்­படும்.