இங்கிலாந்து குழுவில் டிரெண்ட் அலெக்சாண்டர்

1 mins read
c74c0300-cddd-4e9d-91bd-56f7cdf5e712
-

லண்­டன்: இங்­கி­லாந்து காற்­பந்­துக் குழு நிர்­வாகி ஒரு­வ­ழி­யாக 26 வீரர்­க­ளின் பெயர்­களை முடிவு செய்­து­விட்­டார்.

இதன்­மூ­லம் உல­கக் கிண்­ணக் காற்­பந்­தில் 1966ஆம் ஆண்டு பெற்ற வெற்­றிக்­குப் பின் வெற்­றி­யின் பக்­கம் திரும்­பிக்­கூட பார்க்க முடி­யாத இங்­கி­லாந்­துக் குழு மீண்­டும் யூரோ காற்­பந்­துப் போட்­டி­யில் களம் காண்கிறது. வீரர்­க­ளின் தற்­போ­தைய ஆட்­டத்­தி­றன், உடற்­த­குதி, குழு­வின் கட்­டுக்­கோப்­பான ஆட்­டத்­துக்குத் தேவை­யான வீரர்­ க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பது போன்ற சவால்­க­ளுக்கு மத்­தி­யில் இங்­கி­லாந்து நிர்­வாகி செளத்­கேட் தமது குழுவை இறுதி ெசய்­துள்­ளார். இந்­தப் பின்­ன­ணி­யில் தற்­பொ­ழுது டிரெண்ட் அலெக்­சாண்­டர் ஆர்­னால்டை தேர்வு செய்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. இங்கிலாந்தின் லிவர்பூல் குழுவிற்கு சிறப்பாக விளையாடி சென்ற ஆண்டு பிரிமியர் லீக் கிண்ணம், சாம்பியன்ஸ் லீக் விருது ஆகியவற்ைற வெல்ல உதவிய டிரெண்ட் அலெக்சாண்டர் ஆர்னால்டை செளத்கேட் சான் மரினோ, அல்பேனியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டங்களில் தேர்வு செய்யா தது பலரால் விமர்சிக்கப்பட்டது.