மெக்சிகோவின் மத்திய பகுதியிலுள்ள வயல்களில் திடீரென 60 மீட்டர் அகலமான பெரும்பள்ளம் நேற்று முன்தினம் உருவானது. அருகிலுள்ள வீடு ஒன்றை இந்தப் பள்ளம் எந்நேரமும் விழுங்கும் அபாயம் இருப்பதாக புவேப்லா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளத்திற்கு அருகே வசிக்கும் ஒரு குடும்பம் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அப்பகுதியின் ஆளுநர் மிகுவெல் பார்போசா தெரிவித்தார்.
விவசாயத்திற்குப் பயன்படுத்த அந்த மண்ணிலிருந்து அதிகமான நீர் எடுக்கப்பட்டது முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

