மலேசியாவில் மேலும் 7,452 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
37205506-0647-40d1-997a-db697744f2a0
படம்: தி ஸ்டார் -

மலேசியாவில் இன்று (ஜூன் 5) புதிதாக 7,452 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பார்க்கையில், ஆக அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தில் 2,509 பேருக்குத் தொற்று உறுதியானது. சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதனை டுவிட்டரில் பதிவிட்டார்.

அதற்கு அடுத்த நிலைகளில் நெகிரி செம்பிலானில் 843 பேருக்கும் கூட்டரசுப் பிரதேசமான கோலாலம்பூரில் 678 பேருக்கும் சரவாக்கில் 651 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகிருமித்தொற்று