ஆசியான், சீன வெளியுறவு அமைச்சர்கள் நாளை சந்திப்பு

1 mins read
2dd02072-9374-4952-b2af-e97b0958f1f0
-

பெய்ஜிங்: தென்கிழக்காசிய நாடுகள் (ஆசியான்), சீன வெளியுறவு அமைச்சர்கள் நாளை 7ஆம் தேதி சந்தித்துப் பேசவிருக்கின்றனர். ஆசியான் - சீனா கலந்துரையாடல் உறவுகளின் 30ஆம் ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக, சீனாவின் சொங்சிங் நகரில் இந்தச் சந்திப்பு இடம்பெற இருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சு நேற்று ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது. கொரோனா தொற்றுக் கட்டுப்பாட்டில் ஒத்துழைப்பு, வட்டார, உலக விவகாரங்கள் குறித்துச் சந்திப்பின்போது பேசப்படும் எனக் கூறப்பட்டது.