எங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைத்திருக்க வேண்டும்

2 mins read
ffa397ca-75bf-4a48-a614-2236d6967a4f
-

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கை குறித்து சிலாங்கூர் மன்னர்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் தின­மும் ஆக அதி­க­மான கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வாகி வரும் மாநி­ல­மாக சிலாங்­கூர் இருக்க, இது­வரை 10 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே அவர்­க­ளின் முதல் தடுப்­பூசி போடப்­ப­டு­வ­தற்­கான தடுப்­பூசி அளவு வழங்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து சிலாங்­கூர் மன்­னர் ஷர­ஃபு­தீன் இட்­ரிஸ் ஷா கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

முன்­ன­தாக சிலாங்­கூர் மக்­களுக்கு 2.9 மி. தடுப்­பூசி அளவு ஒதுக்­கப்­படும் என்று கூறப்­பட்­டது என்­றும் மாநி­லத்­துக்கு 615,210 தடுப்­பூசி அளவே இது­வரை கிடைத்­துள்­ளது என்­றும் கூறி இது தமக்கு அதிர்ச்­சியை அளித்­துள்­ள­தாக அவர் நேற்று கூறி­னார்.

சிலாங்­கூர் மாநி­லத்­தின் மக்­கள்­தொகை 6.5 மி. அதற்­கேற்­பத் தற்­போது வழங்­கப்­பட்­டுள்ள தடுப்­பூசி எண்­ணிக்கை, அதி­கம் சம­மற்­ற­தாக உள்­ள­தெ­னக் கூறி­ய­து­டன் இது 'நியா­ய­மில்லை' என்­றார் மன்­னர்.

மலே­சி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­திக்கு சிலாங்­கூர் மாநி­லம் ஆக அதிக பங்­க­ளிப்­பதை மன்­னர் நினை­வூட்ட விரும்­பு­வ­தாக அவ­ரின் அறிக்­கையை வெளி­யிட்ட அந்­த­ரங்­கச் செய­லா­ளர் முகம்­மது முனிர் பானி குறிப்­பிட்­டார்.

முன்­னர் அறி­விக்­கப்­பட்ட 2.9 மில்­லி­யன் தடுப்­பூசி அள­வு­கள், சிலாங்­கூ­ரில் உள்ள அர­சாங்க வளா­கம் மற்­றும் விநி­யோ­கக் கிடங்­கில் உள்ள இருப்­பின் எண்­ணிக்கை. இவையே பின்­னர் நாட­ளா­விய விநி­யோ­கம் செய்­யப்­படும் என்று மலே­சிய கொவிட்-19 தடுப்­பூ­சிப் பணிக்­குழு கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தெளி­வு­ப­டுத்­தி­யது.

மலே­சி­யா­வில் நேற்று பதி­வான 5,566 புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் சிலாங்­கூ­ரில் உறு­தி­யானவை 1,524. மலே­சி­யா­வின் மொத்த கிருமி பாதிப்பு எண்­ணிக்கை 627,652ஐ எட்­டி­யுள்­ளது.

சிலாங்­கூர் கிருமி நில­வ­ரம் குறித்து கவலை தெரி­வித்த சுல்­தான் ஷர­ஃபு­தீன், மாநில மக்­களுக்­காக கூடு­தல் தடுப்­பூ­சி­கள் கிடைக்க வழி செய்­யு­மாறு கோரி­னார். மாநி­லத்­தில் குறிப்­பாக கிராமப் புறங்­களில் மேலும் அதி­கத் தடுப்­பூசி நிலை­யங்­கள் வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார். தடுப்­பூ­சி­கள் உயி­ரைக் காக்­கும் என்­பதை­யும் மாநில மக்­க­ளுக்கு சுல்­தான் ஷர­ஃபு­தீன் அறி­வு­றுத்­தி­னார்.