சிறார் தடுப்–பூசி சோதனை

வாஷிங்­டன்: 12 வய­துக்கு கீழ் உள்ள சிறாரின் கொரோனா

கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான தடுப்­பூசி சோத­னைக்­கான பெரும் ஆய்­வைத் தொடங்க உள்­ள­தாக ஃபை­சர் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆய்வு அமெ­ரிக்கா, பின்­லாந்து, போலந்து, ஸ்பெ­யின் ஆகிய நாடு­களில் 90க்கும் மேற்­பட்ட மருத்­துவ ஆய்­வ­கங்­களில் 4,500 பிள்­ளை­க­ளி­டம் நடத்­தப்­ப­டு­கிறது.

144 பிள்ளைகளிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட ஆய்வில் 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்­தை­க­ளுக்­குத் தடுப்பு மருந்து 10 மைக்ரோ கிரா­மும், 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்­தை­க­ளுக்கு 3 மைக்ரோ கிராம் அள­வும் கொடுக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

செப்டம்பர் மாதத்தில் ஐந்து முதல் 11 வயதுடையவர்கள் பற்றிய தரவுகளை எதிர்பார்ப்பதாகவும் மேலும் அந்த மாத இறுதியில் அத்தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கோர முடிவு செய்துள்ளதாகவும் ஃபைசர் நிறுவன செய்தித் தொடர்பாளர் சொன்னார்.

அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஆறு மாதத்திலிருந்து இரண்டு வயது வரையிலான பிள்ளைகளின் தரவுகளையும் ஃபைசர் நிறுவனம் எதிர்பார்க்கி

றது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!