செய்-திக்-கொத்து

செய்-திக்-கொத்து

2 mins read
3e12c8db-d073-4ddc-8e23-1a629cbf690e
-

தாதி­யர்­கள் வேலை நிறுத்­தம்

நியூ­சி­லாந்து: நியூ­சி­லாந்­தில் சுமார் 30,000 தாதி­யர்­கள் நேற்று எட்டு மணி நேர வேலை நிறுத்தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். சம்­பள உயர்வு மற்­றும் வேலைச் சூழல் ஆகி­ய­வை குறித்து அர­சாங்­கத்­து­ட­னான பேச்­சு­வார்த்தை தோல்வி அடைந்­த­தைத் தொடர்ந்து அவர்­கள் வேலை நிறுத்­தத்­தில் ஈடு­பட்­ட­னர். மாவட்ட சுகா­தார கழ­கம் இவ்­வார தொடக்­கத்­தில் முன்மொழிந்த 1.4 விழுக்­காடு சம்­பள உயர்வை தாதி­யர் அமைப்பு நிரா­க­ரித்­து­விட்­டது. அதே­ச­ம­யம் அந்த அமைப்பு கேட்­கும் 17% சம்­பள உயர்வு சாத்­தி­ய­மில்­லாத ஒன்று என்­றும் தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் அர­சாங்­கத் தரப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

கட்­டுப்­பா­டு­கள் தளர்வு

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்­னில் இன்று இரவு முதல் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் என்று விக்­டோ­ரியா மாநில அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். ஆனால் பயண, ஒன்று கூடல்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் மேலும் ஒரு வாரத்­திற்கு நீடிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது. அதோடு மக்­கள் தங்­க­ளு­டைய வீட்­டி­லி­ருந்து 25 கிலோ மீட்­டர் தூரத்­திற்­குள் சென்­று­வர முடி­யும். கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக மெல்­பர்­னில் கடந்த இரண்டு வார­மாக கடு­மை­யான முடக்க உத்­த­ரவு நடப்­பில் இருந்­தது.

பட்­டினிச் சாவு: ஐநா எச்­ச­ரிக்கை

யங்­கூன்: தாய்­லாந்­தின் எல்­லை­யை­யொட்­டி­யுள்ள மியன்­

மா­ரின் கயா மாநி­லத்­தில் மக்­கள் பட்­டி­னி­யா­லும் நோயா­லும் பெரு­ம­ளவு உயி­ரி­ழக்­கக்­கூ­டும் என்று ஐநா எச்­ச­ரித்­துள்­ளது.

"ராணுவ ஆட்­சிக்­கு­ழு­வின் மிரு­கத்­த­ன­மான, கண்­மூ­டித் தன­மான தாக்­கு­தல்­கள் கயா மாநில மக்­க­ளின் உயி­ருக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கின்­றன. உட­ன­டி­யாக எது­வும் செய்­யா­விட்­டால், பட்­டி­னி­யா­லும் நோயா­லும் அங்கு பெரு­ம­ள­வில் மக்­கள் செத்து மடி­வார்­கள்," என்று மியன்­மார் மனித உரி­மை­கள் தொடர்­பான ஐநா சிறப்பு அதி­காரி தாமஸ் ஆண்ட்­ரூஸ் ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.

தொழில்துறை கொள்கை மசோதா

வாஷிங்­டன்: தொழில்துறை கொள்­கை­யு­டன் கூடிய மசோ

தாவை அமெ­ரிக்க செனட் சபை பெரும்­பான்மை வாக்கு

களு­டன் நிறை­வேற்­றி­யுள்­ளது. சீனா­வால் அதி­க­ரித்து வரும் தொழில்­நுட்ப அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்­ளும் நோக்­கில் இந்த மசோதா நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதற்கு ஆத­ர­வாக 68 வாக்­கு­களும் எதி­ராக 32 வாக்­கு­களும் செலுத்­தப்­பட்­டன.

அமெ­ரிக்­கா­வின் தொழில்­நுட்­பம், ஆராய்ச்­சியை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான இந்த மசோதா சுமார் 190 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்­களை ஒதுக்­கி­யுள்­ளது. இது தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஆராய்ச்­சி­களை மேற்­கொள்­ளும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கும் இடை­யி­லான பிணைப்பை எளி­தாக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.