புதுடெல்லி: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் உலக டெஸ்ட் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, இந்திய அணி இலங்கை சென்று மூன்று போட்டி கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்தது.
விராத் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாததால் புதிய அணித் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம்:-
1. ஷிகர் தவான் (அணித் தலைவர்), 2. புவனேஷ்வர் குமார் (துணை அணித் தலைவர்), 3. பிரித்வி ஷா, 4. தேவ்தத் படிக்கல், 5. ஆர். கெய்க்வாட், 6. சூர்ய
குமார் யாதவ், 7. மணிஷ் பாண்டே, 8. நிதிஷ் ராணா, 9. இஷான் கிஷன் (விக்கெட் காப்பாளர்), 10. சஞ்சு சாம்சன் (விக்கெட் காப்பாளர்), 11. சாஹல், 12. ராகுல் சாஹர், 13. கே. கவுதம், 14. குருணால் பாண்டியா, 15 குல்தீப் யாதவ், 16. வருண் சக்ரவர்த்தி, 17. தீபக் சாஹர், 18. நவ்தீப் சைனி, 19. சி. சகாரியா.
வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள்: இஷான் பெரேல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங்.

