தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் கோஹ்லி

தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் கோஹ்லி

1 mins read
8683c803-b540-4ec4-939e-a0f61d003125
-

துபாய்: டெஸ்ட் கிரிக்­கெட் வீரர்

களுக்­கான தர­வ­ரிசை பட்­டி­யலை அனைத்­து­லக கிரிக்­கெட் மன்­றம் வெளி­யிட்­டுள்­ளது.

இதில் பந்­த­டிப்­பா­ளர்­க­ளுக்­கான வரி­சை­யில் இந்­திய அணித் தலை­வர் விராத் கோஹ்லி ஐந்­தா­வது இடத்­தி­லும் ரிஷப் பன்ட் மற்­றும் ரோகித் சர்மா கூட்­டாக இணைந்து ஆறா­வது இடத்­தி­லும் தொடர்­கின்­ற­னர்.

இம்­மா­தம் 18ஆம் தேதி தொடங்­கும் நியூ­சி­லாந்­துக்கு எதி­ரான உலக டெஸ்ட் போட்­டிக்­கான

இறு­திப்­போட்­டி­யில் கோஹ்லி தலை­மை­யில் இந்­தியா கள­மி­றங்க உள்­ளது. தர­வ­ரி­சை­யில் ஆறா­வது இடத்­தைப் பிடித்­துள்ள ரிஷப் பன்ட் மற்­றும் ரோகித் சர்மா தலா 747 புள்­ளி­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.

பந்­து­வீச்­சா­ளர் தர­வ­ரி­சை­யில் தமி­ழக வீரர் ரவிச்சந்திரன்

அஷ்வின் இரண்­டா­வது இடத்­தைத் தக்­க­வைத்­துக்­கொண்­டார்.

பந்துவீச்சாளர் பிரிவுக்கான முதல் பத்து இடங்களில் இருக்­கும் ஒரே இந்­திய வீரர் எனும் பெருமை அஷ்வினைச் சேரும்.

ஆல்-ரவுண்­டர் தர­வ­ரி­சை­யில் இந்­திய வீரர்­கள் ரவீந்­திர ஜடேஜா இரண்டவது இடத்­தி­லும், ரவிச்­சந்­தி­ரன் அஷ்வின் நான்காவது இடத்­தி­லும் தொடர்கின்றனர்.

347 பந்­து­களில் 200 ஓட்டங்­கள் எடுத்த நியூ­சி­லாந்­தின் டெஸ்ட் அறி­முக வீரர் டேவன் கான்வே டெஸ்ட் பந்தடிப்பாளர் தர­வ­ரி­சை­யில் 447 புள்­ளி­க­ளு­டன் 77வது இடத்­தில் நுழைந்­துள்­ளார்.

நியூ­சி­லாந்­தின் அணித் தலைவர் கேன் வில்­லி­யம்­சன் 895 புள்­ளி­க­ளு­டன் முத­லி­டத்­தில் உள்­ளார்.