யுவராஜ் சிங்: 2007ல் அணித் தலைவராக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன்

மும்பை: 2007ஆம் ஆண்­டில் முதல்­மு­றை­யாக நடத்­தப்­பட்ட டி20 உல­கக் கிண்ண கிரிக்­கெட் போட்­டி­யில் டோனி தலை­மை­யி­லான இந்­திய அணி மகு­டம் சூடி­யது.

அதற்கு முன்பு நடை­பெற்ற 50 ஓவர் உல­கக் கிண்ண கிரிக்­கெட் போட்­டி­யில் ராகுல் டிரா­விட் தலை­மை­யி­லான இந்­திய அணி அதிர்ச்­சி­க­ர­மாக தோல்­வி­யைத் தழு­வி­யது. இத­னால் இந்­திய அணி கடு­மை­யான விமர்­சனங்­க­ளுக்கு ஆளா­னது. அதன்­பின் டி20 உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் மூத்த வீரர்­

க­ளுக்கு ஓய்வு அளித்­து­விட்டு இளம் வீரர்­கள் கொண்ட இந்­திய அணி தேர்வு செய்­யப்­பட்­டது.

அணித் தலை­வ­ராக டோனி முதல்­மு­றை­யாக நிய­மிக்­கப்­பட்­டார். இந்த நிலை­யில் 2007ஆம் ஆண்டு டி20 உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் இந்­திய அணிக்­குத் தலை­மை­தாங்­கும் எதிர்­பார்ப்­பு­டன் தாம் ஆவ­லு­டன் இருந்­த­தாக முன்­னாள் நட்­சத்­திர வீரர் யுவ­ராஜ் சிங் தெரி­வித்­தார்.

"2007ஆம் ஆண்டு 50 ஓவர் உல­கக் கிண்­ணப் போட்­டி­யி­லி­ருந்து இந்­தியா வெளி­யே­றி­ய­தால் இந்­திய ரசி­கர்­க­ளி­டையே கடும் கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டது. பின்­னர் இரண்டு மாத இங்­கி­லாந்து சுற்­றுப்­ப­ய­ண­மும் தென்­னாப்­பி­ரிக்­கா­வுக்­கும், அயர்­லாந்­துக்­கும் ஒரு மாத சுற்­றுப்­ப­ய­ண­மும் இருந்­தது.

"அதன்­பின்­னர் டி20 உலகக் கிண்­ணப் போட்டி நடை­பெற்­றது. வெளி­நா­டு­களில் நான்கு மாத சுற்­றுப்­ப­ய­ணம் இருந்­தது. எனவே மூத்த வீரர்­கள் தங்­க­ளுக்கு இடை­வெளி தேவை என்று நினைத்­தார்­கள். வெளிப்­ப­டை­யாக சொல்ல வேண்­டு­மென்­றால் டி20 உல­கக் கிண்­ணத்தை யாரும் பெரி­தாக எடுத்­துக்­கொள்­ள­வில்லை.

"அப்­போட்­டி­யில் இந்­திய அணிக்கு நான் தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­வேன் என்று எதிர்­பார்த்­தேன். பின்­னர் டோனி அணித் தலை­வ­ராக இருப்­பார் என்று அறி­விக்­கப்­பட்­டது. அணித் தலை­வ­ராக யார் நிய­மிக்­கப்­பட்­டா­லும் அதை ஏற்­றுக்­கொண்டு அவ­ருக்கு ஆத­ரவு அளிக்க வேண்­டும். அதைத்­தான் நானும் செய்­தேன்," என்­றார் யுவ­ராஜ் சிங்.

2007ஆம் ஆண்டு டி20 உல­கக் கிண்­ணத்தை இந்­தியா கைப்­பற்­றி­ய­தற்கு யுவ­ராஜ் சிங் முக்­கிய கார­ண­மாக இருந்­தார். அந்­தப் போட்­டி­யில்­தான் இங்­கி­லாந்து வேகப்­பந்து வீச்­சா­ளர் ஸ்டூ­வர்ட் பிராட் வீசிய ஒரு ஓவ­ரில் தொடர்ந்து 6 சிக்­சர்­களை அடித்து யுவ­ராஜ் சிங் சாதனை படைத்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!