தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெக்டோனல்ட்ஸ் பிரெஞ்சு பிரைஸ்: சுவாரஸ்ய தகவல்

2 mins read
3aa6484b-1ecd-4510-b02a-62756b6bbf1b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலகின் பிரபலமான விரைவு - உணவகங்களில் ஒன்றான மெக்டோனல்ட்ஸ் தயாரிக்கும் அனைத்து உணவுகளும் சிறியவர் முதல் பெரியவர் வரை சுவையால் வசீகரித்தவை.

உலகெங்கும் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஏறக்குறைய 40,000 கடைகளில் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் அன்றாடம் கிட்டத்தட்ட 70 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் உணவுகளில் பலருக்கும் பிடித்தமானது பிரெஞ்சு ஃபிரைஸ் எனலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் பிரியமாக உண்ணும் இந்த பிரைஸ், உருளைக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகின்ற ஒருவிதமான சீவல்.

மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் தனது உணவகங்களில் தரத்தைப் பேண, உலகெங்கும் தான் விநியோகிக்கும் பொருட்களில்தான் உணவைத் தயாரிப்பது மட்டுமல்லாமல், தான் அனுமதிக்கும் சமையல் முறையைத்தான் அனைத்து கடைகளிலும் நடைமுறைப்படுத்துகிறது.

பிரெஞ்சு பிரைஸ் உணவுக்குரிய உறைந்த உருளைக்கிழங்கு சீவல்களை பதனிட்டு அமெரிக்காவிலிருந்து அனைத்து நாடுகளுக்கும் மெக்டோனல்ட்ஸ் அனுப்பி வைக்கிறது.

இந்த உருளைக்கிழங்குகளை கொள்முதல் செய்வதற்கு மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் யாரோடு ஒப்பந்தம் வைத்திருக்கிறது என்று பார்த்தால், அவர் வேறு யாருமல்ல.

அனைவருக்கும் தெரிந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ், அமெரிக்காவின் பெருமளவிலான விவசாய நிலங்களுக்கு உரிமையுடைய தனிநபர் முதலாளி.

அமெரிக்காவின் 18 மாநிலங்களில் அவருக்கு சொந்தமான ஏறத்தாழ 269,000 ஏக்கர் நிலங்களில் பல்வேறு வகையான விவசாயங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலங்களில் விளையும் உருளைக்கிழங்குகளை மட்டுமல்ல, கேரட் மற்றும் வெங்காயத்தையும் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் தனது கடைகளுக்கு கொள்முதல் செய்வதாக என்பிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்