மக்கள் நலன் காக்க கூடுதல் மானியம் வழங்கும் மலேசியா

மக்கள் நலன் காக்க கூடுதல் மானியம் வழங்கும் மலேசியா

2 mins read
de2a5968-5fc3-4d40-bdf8-39f70e1fda33
-

கோலா­லம்­பூர்: எரி­சக்தி, சமை­யல் எண்­ணெய் மானி­யத்­துக்­காக மலே­சியா இவ்­வாண்டு 8 பில்­லி­யன் ரிங்­கிட் ($2.58 பில்­லி­யன்) ஒதுக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. வழக்­க­மான தொகை­யை­விட இது இரண்டு மடங்­கிற்­கும் அதி­கம் என்று மலே­சிய நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க மலே­சி­யா­வில் இம்­மா­தம் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முடக்­க­நி­லையை மலே­சிய அரசு இம்­மா­தம் 28ஆம் தேதி வரை நீட்­டித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக மலே­சிய மக்­கள் சிர­மப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­

க­ளுக்கு உத­வும் வகை­யில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் மலே­சிய அர­சாங்­கம் கூறி­யது.

உல­க­ள­வில் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை உயர்ந்­தி­ருப்­ப­தால் எரி­பொ­ருள் மற்­றும் சமை­யல் எண்­ணெய் விலை­களும் அதி­க­ரிக்க இருப்­ப­தாக மலே­சிய நிதி அமைச்­சர் துங்கு ஸஃப்ருல் அப்­துல் அசிஸ் தெரி­வித்­தார்.

"மக்­க­ளின் நல­னைக் காக்­க­வும் வர்த்­த­கங்­க­ளுக்கு உத­விடவும் விலை ஏற்­றத்தை ஈடு­செய்ய மலே­சிய அர­சாங்­கம் மானி­யம் வழங்க தயா­ராக இருக்­கிறது. விலை அதி­

க­ரிப்­பால் ஏற்­படும் செலவை மலே­சிய அர­சாங்­கம் ஏற்­க­வி­ருக்­கிறது," என்­றார் அவர்.

மானி­யங்­க­ளுக்­காக மலே­சிய அர­சாங்­கம் 2019ல் 6.32 பில்­லி­யன் ரிங்­கிட், 2020ல் 2.16 பில்­லி­யன் ரிங்­கிட் ஒதுக்­கி­ய­தாக திரு ஸஃப்ருல் தெரி­வித்­தார்.

அண்­மைய கால­மாக மலே­சி­யா­வில் தொடர்ந்து பல­முறை முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனை முன்­னிட்டு மக்­க­ளுக்கு உத­வும் வகை­யில் கூடு­த­லாக $12.8 பில்­லி­யன் உத­வித் தொகையை மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் கடந்த மாதம் அறி­வித்­தார்.

மலே­சி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று அன்­றா­டப் பாதிப்­பும் மர­ணங்­களும் கடந்த மாதம் உச்­சத்தை எட்­டி­யது. கடந்த சில நாட்­க­ளாக இவை குறைந்­துள்­ளன.

நேற்று மேலும் 5,793 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக மலே­சிய சுகா­தா­ரத் துறை தெரி­வித்­தது. இதன் மூலம் மலே­சி­யா­வில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 652,204ஆக அதி­க­ரித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் நில­வ­ரப்­படி கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மலே­சி­யா­வில் இது­வரை 3,768 உயி­ரி­ழப்­பு­கள் நிகழ்ந்­துள்­ளன.

இளை­யர்­க­ளின் உதவி

நாடப்­ப­டு­கிறது

இதற்­கி­டையே, கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பாக மலே­சிய மக்­க­ளி­டையே நம்­பிக்­கையை ஏற்­

ப­டுத்த அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மலே­சிய தடுப்­பூசி ஆத­ரவு தொண்­டூ­ழி­யர் திட்­டத்­தில் பங்­கெ­

டுக்­கும்­படி அந்­நாட்டு இளை­யர்­கள்

ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இந்­தத் திட்­டத்­தில் பங்­கெ­டுத்து மேலும் பல மலே­சி­யர்­களை, குறிப்­பாக இளை­யர்­க­ளைத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஊக்­கு­விக்க முன்­வர வேண்­டும் என்று மலே­சிய இளை­யர் மன்­றம் கேட்­டுக்­கொண்­டது.

"கொவிட்-19 உயி­ருக்கு ஆபத்தை விளை­விக்­கக்­கூ­டிய நோய் என்­பதை இளை­யர்­க­ளுக்­குப் புரி­ய­வைக்க வேண்­டும். குறிப்­பாக, உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை கூடு­தல் ஆபத்­து­மிக்­கது என அவர்­க­ளுக்­குத் தெரிய வேண்­டும்," என்று மலே­சிய இளை­யர் மன்­றத்­தின் தலை­வர் திரு ஜுவித்ரி ஜோஹா தெரி­வித்­தார்.