அமெரிக்கா: சீனாவின் ஒரே வர்த்தகத் தடத்துடன் போட்டியிடும் திட்டத்தை ஜி-7 ஆதரிக்கிறது

கார்­பிஸ் பே: சீனா­வின் ஒரே வர்த்­த­கத் தடத்­து­டன் போட்­டி­யிட உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய உல­க­ளா­விய உள்­கட்­ட­மைப்­புத் திட்­டத்­துக்கு ஜி-7 நாடு­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­தாக வெள்ளை மாளிகை தெரி­வித்­துள்­ளது.

இந்­தப் புதிய திட்­டம் ஏழை நாடு­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கும் என்று அது கூறி­யது.

Build Back Better World எனும் அந்­தத் திட்­டத்துக்கு இங்­கி­லாந்­தில் நடை­பெ­றும் மாநாட்­டில் கலந்­து­கொள்­ளும் ஜி-7 நாடு­க­ளின் தலை­வர்­கள் ஒப்­புதல் அளித்­துள்­ள­தாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னின் நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

"ஜி-7 தலை­வர்­க­ளைச் சந்­தித்து சீனா­வு­ட­னான உத்­தி­பூர்வ போட்டி குறித்து அதி­பர் பைடன் கலந்­து­ரை­யா­டி­னார். ஏழை நாடு­க­ளுக்கு உத­வும் உள்­கட்­ட­மைப்பை அமைப்­

ப­தில் உறு­தி­யாக இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்," என்று வெள்ளை மாளிகை கூறி­யது.

பரு­வ­நிலை, சுகா­தா­ரம், மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பம், பாலி­னச் சமத்­து­வம் ஆகி­ய­வற்­றில் முத­லீடு செய்ய ஜி-7 நாடு­களும் அதன் பங்­கா­ளி­களும் நிதி திரட்ட

விரும்­பு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சீனா­வின் ஒரே வர்த்­த­கத் தடத்தை 2013ஆம் ஆண்­டில் சீன அதி­பர் ஸி ஜின்­பிங் அறி­மு­கப்­

ப­டுத்­தி­னார். ஆசியா, ஐரோப்பா மட்­டு­மின்றி உல­கின் மற்ற வட்­டா­ரங்­க­ளை­யும் அது குறி­வைத்­துள்­ளது. சீனா­வின் ஒரே வர்த்­த­கத் தடத் திட்­டத்­து­டன் ஒத்­து­ழைக்க 100க்கும் மேற்­பட்ட நாடு­கள் ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன. இந்­தத் திட்­டத்­தின்­கீழ் ரயில் பாதை­கள், துறை­மு­கங்­கள், நெடுஞ்­சா­லை­கள் உட்­பட பல உள்­

கட்­ட­மைப்­பு­கள் கட்­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் இந்­தத் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்தி சீனா அதன் ஆதிக்­கத்தை விரி­வு­ப­டுத்த முயற்சி செய்­வ­தாக அர­சி­யல் விமர்சகர்­கள் பலர் குறைகூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!