தமிழ் அகதிகளுக்கு ஆதரவுக் குரல்

தமிழ் அகதிகளுக்கு ஆதரவுக் குரல்

1 mins read
8e03007e-9c93-4ce0-ae85-97ac45debe7b
தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ்க் குடும்பத்துக்கு ஆதரவாக திரண்ட ஆஸ்திரேலியர்கள்.படம்: ஏஎஃப்பி -

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தஞ்­சம் புகுந்­துள்ள இலங்­கைத் தமிழ்க் குடும்­பத்­துக்­காக ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் பலர் ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

நடே­ச­லிங்­கம் முரு­கப்­பன்-கோகி­லா­பத்­ம­பி­ரியா தம்­ப­தி­ய­ரும் அவர்­க­ளது இரு மகள்­க­ளான தர்­ணிக்­கா­வும் கோபி­கா­வும் பல ஆண்­டு­க­ளாக அக­தி­கள் தடுப்பு மையத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அந்த இரண்டு சிறு­மி­களும் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பிறந்­த­வர்­கள். நடே­ச­லிங்­க­மும் கோகி­லா­பத்­ம­பி­ரி­யா­வும் இலங்­கை­யி­லி­ருந்து தப்பி ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு பயண ஆவ­ணங்­கள் ஏதும் இன்றி வந்­த­வர்­கள்.

இந்­நி­லை­யில், 2019ஆம் ஆண்­டில் இந்­தக் குடும்­பத்தை இலங்­கைக்கு அனுப்ப ஆஸ்­தி­ரே­லியா முடிவு செய்­தது.

இதை எதிர்த்து போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. அவர்­களை இலங்­கைக்கு அனுப்­பா­மல்­ இ­ருக்க நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து, கிறஸ்­மஸ் தீவில் இந்­தக் குடும்­பம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், நடே­ச­லிங்­கம்-கோகி­லா­பத்­மபி­ரியா தம்­ப­தி­ய­ரின் இளைய மக­ளான 4 வயது தர்­ணிக்­கா­வுக்கு உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டிய ரத்த தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு பெர்த் சிறார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது. அவ­ரு­டன் இருக்க அவ­ரது தாயா­ருக்கு மட்­டும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. குழந்­தை­யின் தந்­தை­யும் சகோ­த­ரி­யும் தடுப்பு மையத்­தில் உள்­ள­னர். இந்­நி­லை­யில், நடே­ச­லிங்­கத்­தின் குடும்­பத்தை மீண்­டும் ஆஸ்­தி­லே­யா­வுக்கு அழைத்து வர­வும் அவர்­களை இலங்­கைக்கு அனுப்­பா­மல் நல்­ல­தொரு தீர்­வைக் காண­வும் மெல்­பர்ன் நக­ரில் ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் பலர் நேற்று பேரணி நடத்தி குரல் எழுப்­பி­னர்