புதிய உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்

புதிய உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்

1 mins read
cf8cc635-aa71-4743-95f7-8c07c485fb85
-
Google News Preferred Icon

உட்லண்ட்சிலுள்ள பேருந்து பயணிகள் இனி புதிய உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் மூலமாக சுகமான பயணங்களை எதிர்பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை திறந்த அந்த மையம், உட்லண்ட்ஸ் எம்ஆர்டி நிலையத்தையும் காஸ்வே பாயிண்ட் கடைத்தொகுதியையும் இணைக்கிறது.

திறந்தவெளி தற்காலிக பேருந்து மையத்திற்கு பதிலாக இந்த பேருந்து மையம் இயங்கும்.

பயணிகளுக்கான மேம்பட்ட வசதிகள் மட்டுமின்றி போக்குவரத்து ஊழியர்களுக்கான மேம்பட்ட சிற்றுண்டி நிலையம், கழிப்பறைகள், துப்புரவு பணியாளர் அறை, ஊழியர் ஓய்விடம் ஆகியவைகளும் இருக்கும்.