நீண்டதூரப் பயணம், கிராம மக்கள் அவதி: மலேசிய தடுப்பூசி உத்தி பற்றி விமர்சனம்

நீண்டதூரப் பயணம், கிராம மக்கள் அவதி: மலேசிய தடுப்பூசி உத்தி பற்றி விமர்சனம்

2 mins read
fe7bf764-0cca-4166-aa18-3a73e9bb50ba
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் கொவிட்-19 தடுப்­பூசி உத்தி, பல குறை­கூ­றல்­க­ளுக்­குப் பின்­னர் உற்று நோக்­கப்­பட்டு வரு­கிறது.

குறிப்­பாக, மாபெ­ரும் தடுப்­பூசி நிலை­யங்­கள் நக­ரப் பகு­தி­களில் திறக்­கப்­பட்­டா­லும் கிரா­மப்­புற மக்­கள் அவற்றை நாடு­வ­தில் பெரும் சிர­மத்தை எதிர்­நோக்­கு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

வயது மூத்­த­வர்­கள் தங்­க­ளுக்­கா­ன தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள நீண்­ட­தூ­ரப் பய­ணத்தை மேற்­கொள்ள வேண்டி இருந்­த­தா­கக் கடந்த வாரம் செய்­தி­கள் பர­வின.

கிளந்­தா­னைச் சேர்ந்த 90 வயது கான் கியோக் ஹியாங், தமது தடுப்­பூ­சி­யைப் பெற குபாங் கெரி­யான் என்­னும் பகு­திக்­குச் செல்ல நேரிட்­டது.

இது அவர் வசிக்­கும் பகு­தி­யான ரண்­டாவ் பாஞ்­சாங்­கில் இருந்து சுமார் 45 கிலோ மீட்­டர் தொலை­யில் உள்­ளது.

அந்த மூதாட்­டியை சையது ஹசன் சையது பக்­கார் என்­னும் அவ­ரது அண்டை வீட்­டார் அழைத்­துச் செல்ல வேண்டி இருந்­தது.இது­போன்ற பல சம்­ப­வங்­கள் பற்றி தக­வல்­கள் வந்­துள்­ளன.

இது தவிர, மாபெ­ரும் தடுப்­பூசி நிலை­யங்­களில் பெருங்­கூட்­டம் காணப்­ப­டு­வ­தும் கவ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இது குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் பேசிய மலே­சிய பொது சுகா­தார மருத்­து­வர் சங்­கத் தலை­வர் ஸைனல் ஆரி­ஃபின் ஓமர், "சிறப்­பா­க­வும் வேக­மா­க­வும் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள மாபெ­ரும் தடுப்­பூசி நிலை­யம் என்­னும் அணு­கு­முறை போது­மா­ன­தாக இல்லை," என்­றார்.

சிறிய தடுப்­பூசி நிலை­யங்­கள், நட­மா­டும் நிலை­யங்­கள், நேர­டி­யா­கச் சென்று தடுப்­பூசி பெறும் முறை போன்­ற­வற்றை ஏற்­ப­டுத்­து­வது குறித்து கவ­னம் செலுத்­தப்­பட வேண்­டும்.

குறிப்­பாக, கிரா­மப்­பு­றங்­கள், மக்­கள் நெருக்­க­மான வீட­மைப்­புப் பகு­தி­கள், குறைந்த விலை வீடு­கள் அமைந்­துள்ள பகு­தி­கள் ஆகி­ய­வற்­றுக்கு இவை அவ­சி­யம்," என்­றார் அவர்.