தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கப்பல் நிறுவனத்திடம் $53 மி. இழப்பீடு கோருகிறது இலங்கை

1 mins read
4cf78d69-2506-4f69-9444-00e5cc2795ed
-

கொழும்பு: இலங்கை தனது மேற்கு கடற்­க­ரை­யில் வர­லாறு காணாத மாசு ஏற்­ப­டுத்­தி­ய­தற்­காக கப்­பல் நிறு­வ­னத்­தி­டம் 40 மில்­லி­யன் டாலர் (S$53 மில்­லி­யன்) இழப்­பீடு கோரி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் பதிவு செய்­யப்­பட்ட 'எக்ஸ்-பிரஸ் பேர்ல்' என்­னும் சரக்­குக் கப்­பல் இலங்­கைக் கடற்­ப­குதி­ யில் தீப்­பி­டித்து எரிந்­தது.

கிட்­டத்­தட்ட இரு வாரங்­க­ளாக தீயில் கரு­கிய அக்­கப்­பல் இம்­மா­தம் 2ஆம் தேதி கட­லுக்­குள் மூழ்­கத் தொடங்­கி­யது. கப்­ப­லில் இருந்த டன் கணக்­கான பிளாஸ்­டிக் மூலப்­பொ­ருட்­கள் எரிந்­த­தன் கார­ண­மாக கட­லோ­ரத்­தில் ஏரா­ள­மான பிளாஸ்­டிக் துகள்­கள் ஒதுங்­கின.

கடற்­க­ரையை நீண்­ட­தூ­ரம் சுத்­தப்­ப­டுத்­து­வது இலங்கை அர­சாங்­கத்­துக்­குப் பெரும் சவா­லாக அமைந்­தது.

இத­னால் தனது அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்ட இழப்பை ஈடு செய்ய அந்­தக் கப்­ப­லின் உரி­மை­யா­ள­ரான 'எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ்' நிறு­வ­னத்­தி­டம் இலங்கை இழப்­பீடு கோரி­யுள்­ளது.

இதற்­கான கோரிக்கையை இலங்கை துறை­மு­கம் மற்றும் கப்­பல்­துறை அமைச்­சர் ரோஹித அப­ய­கு­ண­வர்த்­தன கப்­பல் நிறு­வ­னத்­துக்கு அனுப்பி உள்­ளார்.

"இழப்­பீட்­டுத் தொகை­யு­டன் கப்­பல் தீயை அணைப்­ப­தற்­காக நாங்­கள் செய்த செல­வை­யும் அந்­த நி­று­வ­னத்­தி­டம் கேட்­போம்," என்­றார் அவர்.

கப்­பல் எரிந்த சம்­ப­வம் கடல்­துறை பொரு­ளி­ய­லுக்கு ஏற்­ப­டுத்தி இருக்­கும் தாக்­கம் குறித்து ஆராய ஆஸ்­தி­ரே­லி­யாவை இலங்கை நாடி­யுள்­ளது. இந்­தப் பேரி­டர் கார­ண­மாக பல வாரங்­க­ளாக மீன்­பி­டி தொழில் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கை கடல்­துறை பொரு­ளி­ய­லுக்கு முக்­கி­ய­மா­கக் கைகொ­டுத்து வரும் முக்­கிய தொழில் இது.