செய்திக்கொத்து

2 mins read
975cb258-4116-432f-a72d-f6a0cc7e8e43
-

மலேசியாவில் 1.33 மில்லியன் பேர்

இரு தடுப்பூசிகளையும் போட்டனர்

கோலாலம்பூர்: மலேசியாவில் சனிக்கிழமை வரை 1.33 மில்லியன் பேர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு விட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஆதம் பாபா நேற்று கூறினார். இவர்கள் தவிர 3.03 மில்லியன் மக்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மொத்தமாக 4.36 மில்லியன் மக்கள் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளனர் என்றும் அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார். சிலாங்கூர், சரவாக், பேராக், ஜோகூர், கோலாலம்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிகமான மக்கள் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 133,804 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் இவர்களில் 100,360 பேர் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் டாக்டர் ஆதம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை வீழ்த்திய பெல்ஜியம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: யூரோ 2020 'பி' பிரி­வின் மற்­றோர் ஆட்­டத்­தில் பெல்­ஜி­யம் 3-0 என்ற கோல் கணக்­கில் ரஷ்­யாவை வென்­றது. மூன்று கோல்­களில் இரண்டை அக்­கு­ழு­வின் நட்­சத்­தி­ர­மான ரோமேலு லுக்­காக்கு போட்­டார். மற்­றொரு கோலை தாமஸ் முனி­யேர் போட்­டார்.

அஸர்பைஜனில் நடந்த 'ஏ' பிரிவு ஆட்­டம் ஒன்­றில் வேல்ஸ் குழு­வும் சுவிட்­சர்­லாந்து குழு­வும் தரப்­புக்கு ஒரு கோல் போட்டு ஆட்­டத்தை சம­நி­லை­யில் முடித்­துக்­கொண்­டன. ஆட்­டத்­தின் 40வது நிமி­டத்­தில் சுவிட்­சர்­லாந்­தின் பிரீல் எம்­போலோ கோல் போட்­டார். 74வது நிமி­டத்­தில் வேல்­ஸின் கிஃபர் மூர் சம­நிலை கோலைப் போட்டு, தமது குழு­வைத் தோல்­வி­யி­லி­ருந்து காப்­பாற்­றி­னார்.