ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்த ஜுவல் சாங்கி விமான நிலையம் இன்று (ஜூன் 14) பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
2,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கிருமிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவிட்டது. அதில் யாருக்கும் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசிக்குத் தகுதிபெறும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
ஜுவல் கடைத்தொகுதியின் நிர்வாகம் இன்று அத்தகவல்களைத் தெரிவித்தது.
ஜுவல் சாங்கி ஒரு மாதத்துக்கு மூடப்பட்டிருந்ததால் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உதவும் நோக்கில், ஜூன் 21 முதல் 27ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு வாரத்துக்கு அவற்றுக்கு வாடகைத் தள்ளுபடி செய்யப்படும் என்று ஜுவல் சாங்கியின் தலைைம நிர்வாகி திருவாட்டி ஹங் ஜீன் கூறியுள்ளார்.

