ஜகார்த்தாவில் தொற்று 50% அதிகரிப்பு

ஜகார்த்தாவில் தொற்று 50% அதிகரிப்பு

2 mins read
6a8fed62-e21d-480f-b719-9b168769fdcb
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யத் தலை­ந­க­ரான ஜகார்த்­தா­வில் கடந்த வாரம் தொற்­றுச் சம்­ப­வங்­கள் 50 விழுக்­காடு அதி­க­ரித்­தன.

அதி­வே­க­மாகப் பர­வும் தன்மை கொண்ட டெல்டா கிரு­மியே இதற்கு கார­ணம் என்று நம்­பப்­ப­டு­கிறது.

இந்த நிலை நீடித்­தால் மீண்­டும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை அமல்­ப­டுத்­து­வ­தைத் தவிர வேறு வழி­யில்லை என்று ஜகார்த்தா ஆளு­நர் அனிஸ் பஸ்­வெ­டான் எச்­ச­ரித்­துள்­ளார்.

சென்ற ஞாயிற்­றுக்கிழமை அன்று ஜகார்த்­தா­வில் 17,500 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

கடந்த ஜூன் மாதம் இந்த எண்­ணிக்கை 11,500ஆக இருந்­தது.

"தலை­ந­க­ரில் கூடு­தல் கவ­னம் செலுத்­தி­யாக வேண்­டும். தற்­போ­தைய சூழ்­நிலை கை மீறிப் போனால் அவ­ச­ர­கால கட்­டத்­தில் நுழைய வேண்­டி­யி­ருக்­கும். செப்­டம்­பர், பிப்­ர­வ­ரி­யில் அம­லாக்­கப்­பட்ட கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை தற்­போது எடுத்­தாக வேண்­டும்," என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் திரு அனிஸ் தெரி­வித்­தார்.

உரு­மா­றிய டெல்டா கிருமி, முதல் முறை­யாக இந்­தி­யா­வில் அடை­யா­ளம் காணப்­பட்­டது.

இந்­தோ­னீ­சி­யா­வின் பல நக­ரங்­களில் இந்த வகை கிரு­மி­யால் பலர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

ஜகார்த்தா, மத்­திய ஜாவா­வில் குடுஸ் போன்ற இடங்­களில் டெல்டா கிரு­மித்­தொற்று பரவி வரு வதாக பெயர் தெரி­விக்க விரும்­பாத மூத்த அர­சாங்க அதி­காரி ஒரு­வர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் சொன்­னார்.

இதற்­கி­டையே குடு­ஸில் சேக­ரிக்­கப்­பட்ட 34 மாதி­ரி­க­ளின் மர­பணு வரி­சையை ஆராய்ந்­த­தில் அவற்­றில் 28 டெல்டா கிருமி என்று சுகா­தார அமைச்­சின் பேச்­சா­ளர் சிட்டி நடியா டர்­மிஸி தெரி­வித்­தார்.

ஆனால் அது பற்றி அவர் விவ­ரிக்­க­வில்லை.

கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கான மருத்­து­வ­மனை படுக்­கை­களும் 75 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளன.

கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் நான்­கில் ஒன்று ஜகார்த்­தா­வில் பதி­வா­கி­யுள்­ளது. ஆனால் அவர்­கள் ஜகார்த்­தா­வுக்கு வெளியே இருந்து வந்­த­வர்­கள். ஜகார்த்­தா­வைச் சுற்றியுள்ள துணை நக­ரங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

ஜகார்த்­தா­வில் மற்­றொரு கிரு­மிப் பர­வல் அலை ஏற்­ப­டா­மல் இருக்க பாது­காப்பு விதி­மு­றை­களை கண்­டிப்­பாகப் பின்­பற்ற வேண்­டும் என்று பொது­மக்­களை அனிஸ் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

தற்­போது சில வரம்­பு­க­ளு­டன் உண­வ­கங்­களில் உணவு உண்ண அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அவ­சி­ய­மற்ற ஊழி­யர்­களில் ஒரு பகு­தி­யி­னர் வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.