கப்பல் தலைவன் கைது

கப்பல் தலைவன் கைது

1 mins read
38eab712-7f47-46a4-992c-f6235e67da61
-

கொழும்பு: கொழும்பு துறை­மு­கத்­துக்கு அருகே மே 20ஆம் தேதி தீப்­பி­டித்து எரிந்த கப்­ப­லின் தலை­வனை இலங்கை புல­னாய்­வுத் துறையினர் கைது செய்­துள்­ளனர்.

கொழும்­பில் உள்ள ஒரு ஹோட்­ட­லில் அவர் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் அவர் நிறுத்­தப்­ப­டு­வார் என்­றும் போலிஸ் பேச்­சா­ளர் அஜித் ரொஹான தெரி­வித்­தார்.

முன்னதாக அவரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

எக்ஸ்-பிரஸ் பியர்ல் எனும் அந்தக் கப்பல் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் ஹஸிரா துறைமுகத்திலிருந்து கிளம்பிய அந்தக் கப்பலில் 25 டன் நைட்ரிக் அமிலமும் ரசாயன மும் வைக்கப்பட்டிருந்தன. கொழும்பு துறைமுகத்துக்கு அருகே அது விபத்துக்குள்ளானது.