இஸ்ரேலில் 12 ஆண்டு நெட்டன்யாகுவின் ஆட்சி முடிந்தது; புதிய பிரதமர் பதவியேற்பு

இஸ்ரேலில் 12 ஆண்டு நெட்டன்யாகுவின் ஆட்சி முடிந்தது; புதிய பிரதமர் பதவியேற்பு

2 mins read
b47b45a4-4e7e-44ca-bb49-7385b468c6aa
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பதவியை இழந்த நெட்டன்யாகு வெளியேறுகிறார்.வலமிருந்து 2வது புதிய பிரதமரான பென்னட். படம்: ஏஎஃப்பி -

ஜெரு­ச­லம்: இஸ்­ரே­லில் நெட்­டன்­யா­கு­வின் 12 ஆண்டு கால ஆட்சி முடி­வுக்கு வந்­துள்­ளது.

ஆட்சி மாற்­றத்­திற்கு நாடா­ளு­மன்­றம் ஒப்­பு­தல் அளித்­த­தைத் தொடர்ந்து புதிய பிர­த­ம­ராக நஃப்டாலி பென்­னட் பொறுப்பு ஏற்­றுள்­ளார்.

நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் எட்­டுக் கட்­சி­களை உள்­ள­டக்­கிய கூட்­டணி (60-59) மிகக் குறு­கிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றது.

முதல் முறை­யாக இந்­தக் கூட்­ட­ணி­யில் அரபு கட்சி ஒன்­றும் இடம் ெ­பற்­றுள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் திரு பென்­னட் பிர­த­மர் பொறுப்பை ஏற்­ப­தற்கு முன்பு பேசிய 71 வயது திரு நெட்­டன்­யாகு, ஆட்­சி­யைக் கவிழ்க்­கும் வரை நாங்­கள் எதிர்க்­கட்­சி­யாக தலை­நி­மிர்ந்து நிற்­போம் என்று கூறி­யுள்­ளார்.

மார்ச் 23ஆம் தேதி நடை­பெற்ற தேர்­த­லுக்­குப் பிறகு புதிய கூட்­டணி அமைக்­கப்­பட்­டது. பாலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ரான கொள்கை, உள்­நாட்டு சீர்­தி­ருத்தம் ஆகி­ய­வற்றை முன்­வைத்து கட்­சி­கள் தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டன.

ஆனால் ஆட்சி மாற்­றத்­தால் இஸ்­ரே­லின் பாலஸ்தீன கொள்கை யில் மாற்றமிருக்காது என்று பாலஸ்­தீன நிர்­வா­கத்­தி­னர் நம்­பு­கின்­ற­னர்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக் ­க­ரை­யின் சில பகு­தி­களை இணைக்க வேண்­டும் என்று முன்­னாள் பாது­காப்­புத் தலை­வ­ரு­மான திரு பென்­னட் வலி­யு­றுத்தி வந்­துள்­ளார். இத­னால் பாலஸ்­தீன விவ­கா­ரத்­தில் நெட்­டன்­யா­கு­வின் லிக்­குட் கட்சி வழி­யையே அவர் பின்­பற்­று­வார் என்று பாலஸ்­தீன நிர்­வா­கம் கணித்­துள்­ளது.

இஸ்­ரே­லின் நீண்­ட­கா­லப் பிர­த­ம­ரான நெட்­டன்­யாகு 2009ஆம் ஆண்டிலிருந்து பத­வி வகித்துள்ளார்.

இதற்கு முன்பு 1996 முதல் 1999 வரை­யில் முதல் தவ­ணைக் காலத்­தி­லும் அவர் பிர­த­ம­ராக இருந்­துள்­ளார்.

கடந்த இரண்டு ஆண்­டு­களில் நடந்த நான்கு தேர்­தல்­க­ளி­லும் அவ­ரது கட்சி அதிக இடங்­களில் வெற்றி பெற்­றா­லும் ஆட்­சி­ய­மைக்­கும் அள­வுக்­குப் பெரும்­பான்மை பலம் கிடைக்­க­வில்லை. ஒவ்­வொரு தேர்­த­லி­லும் அவ­ரது கட்சி பல­வீ­ன­ம­டைந்­தது.

நெட்­டன்­யாகு மீது ஊழல் வழக்கு ஒன்­றும் விசா­ர­ணை­யில் உள்­ளது. ஆனால் எந்­த­வித தவ­றும் செய்­ய­வில்லை என்று அவர் கூறி வரு­கி­றார்.

புதிய கூட்­டணி அர­சாங்­கம் சுழற்சி முறை­யில் பிர­த­மர் பத­வி­யைப் பகிர்ந்­து­கொள்ள இணக்­கம் கண்­டுள்­ளன.

செல்­வந்­த­ரான 49 வயது பென்­னட்­டுக்­குப் பிறகு 2023ல் தொலைக்­காட்சிப் படைப்­பா­ள­ரான 57 வயது யயிர் லாபிட் பிர­த­மர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.