மியன்மாரில் தடுப்பூசித் திட்ட தலைவர் கைது

மியன்மாரில் தடுப்பூசித் திட்ட தலைவர் கைது

1 mins read
e66aff3a-3bb8-491e-9ae9-9a19eecc1345
-

யங்­கூன்: மியன்­மா­ரில் முன்­னாள் தடுப்­பூ­சித் திட்­டத்­தின் தலை­வரை ராணு­வம் கைது செய்­துள்­ளது.

ராணுவ எதிர்ப்­பா­ளர்­க­ளு­டன் சேர்ந்து சதி செய்­த­தாக அவர் மீது குற்­றம் சுமத்­தப்­ப­ட­விருக்­கிறது.

கடந்த பிப்­ர­வரி மாதம் 1ஆம் தேதி ஓய்வு பெற வேண்­டிய வய­தில் உள்ள ராணு­வத் தலை­வர், மக்­க­ளால் ஜன­நா­யக முறை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தைக் கவிழ்த்து ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­னார்.

ஆங் சான் சூச்சி அர­சாங்­கம், இரண்டு முறை கிரு­மிப் பர­வலை வெற்­றி­க­ர­மாக தடுத்து நிறுத்­தி­யுள்­ளது.

ஆனால் ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய பிறகு கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களும் தடுப்­பூ­சித் திட்­டங்­களும் சீர்­கு­லைந்­துள்­ளன.

கடந்த ஞாயிற்­றுக்கிழமை தொற்று இது­வரை இல்­லாத அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த நிலை­யில் ஜூன் 10ஆம் தேதி அர­சாங்­கத்தைக் கீழ­றுக்­கும் வேலை­யில் ஈடு­பட்­ட­தற்­காக டாக்­டர் ஹிடார் ஹிடார் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ராணு­வம் தெரி­வித்­தது.

இதற்கிடையே மார்ச் மாதம் தடுத்து வைக்கப்பட்ட அமெரிக்க ெசய்தியாளர் நேதன் மாவுங்கை நேற்று ராணுவம் விடுவித்தது.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப் பட்டதாக அவரது வழக்கறிஞர் ஒருவர் தெரி வித்தார்.