தடுப்பு முகாமிலிருந்து பிரியா-நடேஸ் குடும்பம் விடுதலை

தடுப்பு முகாமிலிருந்து பிரியா-நடேஸ் குடும்பம் விடுதலை

1 mins read
5c19b89e-c103-47e3-b7b7-8b270e251d2f
பெர்த் நகரில் தற்காலிகமாகக் குடியேற அனுமதிக்கப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம். இவர்கள் நிரந்தரமாக வாழும் இடம் பற்றி உறுதியான தகவல் இல்லை. படம்: ஊடகம் -

பிரிஸ்­பேன்: மக்­கள் கொடுத்த நெருக்­கத்­தைத் தொடர்ந்து தீவு ஒன்­றில் தடுத்து வைக்­கப்­பட்ட, அடைக்­க­லம் நாடும் தமிழ் குடும்­பத்தை ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் விடுவித்து உள்­ளது.

அடைக்­க­லம் நாடி ஆஸ்திரேலி யாவுக்கு வந்த பிரியா-நடேஸ் குடும்­பம் இலங்­கைக்­குத் திருப்பி அனுப்­பப்­ப­டு­வதை எதிர்த்­துப் போராடி வந்­தது.

அத­னைத் தொடர்ந்து 2019 ஆகஸ்ட் முதல் தொலை­தூர கிறிஸ்­மஸ் தீவில் உள்ள குடி­

நு­ழைவு தடுப்பு முகாமில் நால்­வ­ரைக் கொண்ட அந்­தக் குடும்­பம் தடுத்து வைக்­கப்­பட்­டது.

நடேஸ் முரு­கப்­பன், அவ­ரது மனைவி பிரியா, இவ்­வி­ரு­வ­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பிறந்த கோபிகா, தரு­ணிகா ஆகி­யோ­ரில் நான்கு வயது தரு­ணி­கா­வின் உடல்­நிலை கடந்த வாரம் பாதிக்­கப்பட்டது.

அத­னைத் தொடர்ந்து மேற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பெர்த் நக­ரில் உள்ள ஒரு மருத்­து­வ

­ம­னைக்கு வான்­வ­ழி­யாக அச்­சி­றுமி கொண்டு செல்­லப்­பட்­டார்.

ரத்­தத் தொற்­றுக்­காக அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்­தது. இந்­நி­லை­யில், சிறு­மி­யின் குடும்­பத்­தி­ன­ரை­யும் பெர்த் நக­ருக்கு அனுப்­பக் கோரி குவீன்ஸ்­லாந்­தில் உள்ள சிறு நக­ரான பிலோ­யெ­லா­வில் உள்ள அண்டை வீட்­டார், பிரியா-நடேஸ் குடும்­பம் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தங்க அனு­ம­திக்­கு­மாறு குரல் எழுப்­பி­னர். அதற்­குப் பேரா­த­ரவு கிட்­டி­யது.

குறிப்­பாக, ஆஸ்­தி­ரே­லிய ஆளும் கூட்டணியிலிருந்தே அர­சாங்­கத்­திற்கு நெருக்­கு­தல் வரத் தொடங்­கி­யது.

அத­னைத் தொடர்ந்து அந்­தக் குடும்­பம் பெர்த் நக­ரில் குடி­யேற அனு­ம­திக்­கப்­பட்டு உள்­ள­தாக ஆஸ்­தி­ரே­லிய குடி­நு­ழைவு அமைச்­சர் அலெக்ஸ் ஹாக் திங்­கட்­கி­ழமை அறி­வித்­தார்.