யூரோ போட்டியின் தலைசிறந்த கோலை போட்டார் செக் குடியரசின் பேட்ரிக் ஷிக்

யூரோ போட்டியின் தலைசிறந்த கோலை போட்டார் செக் குடியரசின் பேட்ரிக் ஷிக்

3 mins read
79eb550d-20f3-4d43-9cbf-e47c5cc16b28
பேட்ரிக் ஷிக். -
multi-img1 of 2

கிளாஸ்கோ: செக் குடி­ய­ர­சின் பேட்­ரிக் ஷிக் சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று காலை நடை­பெற்ற யூரோ 2020, 'டி' பிரிவு ஆட்­டத்­தில் யூரோ போட்­டித் தொட­ரின் தலை­சி­றந்த கோலை போட்டு அனை­வ­ரை­யும் வியப்­பில் ஆழ்த்­தி­னார். ஸ்காட்­லாந்­து­ட­னான ஆட்­டத்­தின் 42வது நிமி­டத்­தில் ஷிக் போட்ட கோலு­டன் செக் குடி­ய­ரசு முன்­ன­ணிக்­குச் சென்­றது.

23 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் ஒரு பிர­தான காற்­பந்­துப் போட்­டி­யில் பங்­கேற்­கும் ஸ்காட்­லாந்து இந்த ஆட்­டத்­தில் வெற்றி பெற வேண்­டும் என்ற வேட்­கை­யு­டன் களம் இறங்­கி­யது. ஆனால், செக் குடி­ய­ர­சின் கட்­டுக்­கோப்­பான ஆட்­டத்­துக்கு அத­னால் ஈடுகொடுக்க முடி­ய­வில்லை.

பிற்பாதி ஆட்டத்தில் இன்னும் முனைப்புடன் ஆடிய செக் குடியரசு, ஸ்காட்லாந்தின் கோல் முனையை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தது. எப்படியாயினும் ஒரு கோல் போட்டு சமநிலை காண வேண்டும் என்ற ஸ்காட்லாந்தின் கனவை தவிடு பொடியாக்கியது செக் குடியரசு.

ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் திடலின் மத்தியில் பந்தைப் பெற்ற ஷிக், எதிரணியின் கோல் காப்பாளர் தனது இடத்தைவிட்டு அகன்றி ருப்பதைப் பார்த்தார்.

அந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக் கொண்ட அவர், சுமார் 45.44 மீட்­டர் தூரத்­தி­லி­ருந்து கோல் முனையை நோக்கி உதைத்­தார். பந்து உயரே பறந்து லாவ­க­மாக வலைக்­குள் புகுந்­தது. அதைத் தடுத்து நிறுத்த ஸ்காட்­லாந்து கோல் காப்­பா­ள­ர் மேற்கொண்ட முயற்சி கைகொ­டுக்­க­வில்லை.

செக் குடி­ய­ரசு இப்­போது 3 புள்­ளி­க­ளு­டன் 'டி' பிரி­வில் முதல் இடத்­தைப் பிடித்­துள்­ளது. நாளை மறு­நாள் அது இங்­கி­லாந்­தைச் சந்­திக்­கும். ஸ்காட்­லாந்து குரோ­வே­ஷி­யா­வு­டன் பொரு­தும்.

'இ' பிரிவு ஆட்­டத்­தில் ஸ்பெ­யி­னும் சுவீ­ட­னும் கோல் இன்றி ஆட்­டத்­தைச் சம­நி­லை­யில் முடித்­துக் கொண்­டன. இரு குழுக்­களும் பல வாய்ப்­பு­களை வீண­டித்­தன. பிற்­பாதி ஆட்­டத்­தில் சுவீ­டன் சிறப்­பாக ஆடி­யது. அதன் ஆட்­டக்­கா­ரர்­கள் தொடர்ந்து ஸ்பெ­யி­னின் கோல்முனையை நோக்கி தாக்­கு­தல் தொடுத்துக்கொண்­டி­ருந்­த­னர். ஸ்பெ­யின் அடுத்து சனிக்­கி­ழ­மை­யன்று போலந்­தைச் சந்­திக்­கும். அதில் வெற்றி பெற்­றால்­தான் அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றும் வாய்ப்பு சற்று பிர­கா­ச­மாக இருக்­கும்.

மற்­றோர் 'இ' பிரிவு ஆட்­டத்­தில் ஸ்லோ­வாக்­கியா 2-1 என்ற கோல் கணக்­கில் போலந்­தைத் தோற்­க­டித்­தது. ஆட்­டத்­தின் 60வது நிமி­டத்­தில் போலந்­தின் கிரே­கோஸுக்கு நடு­வர் சிவப்பு அட்டை காண்­பித்து ஆட்­டத்தை விட்டு வெளி­யேற்­றி­யதை ஒரு நல்ல வாய்ப்­பாகப் பயன்

­ப­டுத்தி ஸ்லோ­வாக்­கியா கடு­மை­யா­கப் போரா­டி­யது. அதற்குப் பலன் தரு­வ­து­போல, ஸ்லோ­வாக்­கி­யா­வின் ஆட்­டக்­கா­ரர் மிலன் ஸ்கி­ரி­னி­யர் வெற்­றி கோலை போட்­டார்.

யூரோ 2020 இறுதிப் போட்டியைக் காண 40,000 பேர் அனுமதி

லண்டன்: யூரோ 2020 போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதியாட்டம் லண்டனின் வெம்ப்ளி விளையாட்டரங்கத்தில் நடைபெறும். அதனைக் காண 40,000 ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்.

கோப்பா அமெரிக்கா: சமநிலையால் மெஸ்ஸி கோபம்

ரியோ டி ஜெனிரோ: அர்ஜெண்டினாவுக்கும் சிலிக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த கோப்பா அமெரிக்கா போட்டியில் அர்ஜெண்டி னா நட்சத்திரம் லையனல் மெஸ்ஸி ஃபிரிகிக் வாய்ப்பு மூலம் அற்புதமான ஒரு கோலை போட்டார். ஆனால் அந்த வெற்றி கோல் நிலைக்கவில்லை. பிற்பாதி ஆட்டத்தில் சிலி யின் அர்டுரோ விடால் அடித்த பெனால்டியை அர்ஜெண்டினா கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினெஸ் தடுத்தார். ஆனால், பந்து சிலியின் எட்வார்டோ வார்காஸிடம் சென்றது. அவர் அதைச் சற்றும் தாமதிக்காமல் கோலாக்கினார்.

"ஆட்டத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி னாலும் நாங்கள் இறுதி வரை அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை. அந்த இயலாமையை சிலி குழு பயன்படுத்திக் கொண்டது," என்று மெஸ்ஸி குறைப்பட்டுக் கொண்டார்.

இதற்கிடையே மற்றொரு கோப்பா அமெரிக்கா போட்டியில் பராகுவே 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியா குழுவை வென்றது. பெனால்டி வாய்ப்பு மூலம் முதல் கோலைப் போட்டார் பொலிவியாவின் எர்வின் சாவெட்ரா. பின்னர் பராகுவே கடுமையாகப் போராடி, ரோமேரோ கமாரா, ஏஞ்சல் ரோமேரோ இருவர் மூலம் இரண்டு கோல்களைப் போட்டது. பொலிவியாவின் ஜோம் குய்லர் தனது சொந்த வலைக்குள் பந்தைப் புகுத்தி யதால் அது பராகுவேயின் கோலாகியது.