செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c322b801-36ce-4ced-816b-c2ef7ed3d640
-

மலேசியாவில் தொற்று 5,419

புத்ராஜெயா: மலேசியாவில் நேற்று புதிதாக 5,419 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது. இவர்களையும் சேர்த்து பாதிக்கப் பட்டோரின் மொத்த எண்ணிக்கை 667,876க்கு அதிகரித்தது. சிலாங்கூர் மாநிலத்தில்தான் நேற்று ஆக அதிகமாக 1,996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் அரசு மீது புகார்

தோக்­கியோ: ஜப்­பான் பிர­த­மர் யோஷி­ஹிடே சுகா­வுக்கு எதி­ராக நேற்று எதிர்க்­கட்­சி­கள் நம்­பிக்கை இல்­லாத் தீர்­மா­னம் சமர்ப்­பித்து உள்­ள­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் கூறின.

பல்­வேறு அம்­சங்­களில் மக்­க­ளின் நம்­பிக்­கையை ஜப்­பா­னிய அர­சாங்­கம் இழந்­து­விட்­ட­தாக அதில் கூறப்­பட்டுள்­ளது. மக்­க­ளின் வாழ்க்­கை­யை­க் காக்க அரசு தவ­றி­விட்­ட­தாக அர­சி­ய­ல­மைப்பு ஜன­நா­ய­கக் கட்­சி­யின் தலை­வர் யுகியோ எடானோ தெரி­வித்­துள்­ளார்.

மனித உரிமை மீறல் புகார்

ஜெனிவா: பங்­ளா­தே­ஷில் அடைக்­க­லம் புகுந்த 800,000க்கும் மேற்­பட்ட ரோஹிங்யா அக­தி­க­ளி­டம் ஐக்­கிய நாடு­கள் அமைப்பு முறை­யற்ற வகை­யில் தக­வல்­க­ளைத் திரட்டி மியன்­மார் அர­சாங்­கத்­துக்கு அனுப்­பி­ய­தாக மனித உரி­மைக் கண்­கா­ணிப்புக் குழு தெரி­வித்துள்­ளது. இது தொடர்­பாக விசா­ரணை நடத்­து­மா­றும் அது நேற்று வலி­யு­றுத்­தி­யது. ஐநா அக­தி­கள் முகவை கடந்த மூன்­றாண்டு கால­மாக ரோஹிங்யா அக­தி­கள் பற்­றிய விவ­ரங்­களை பதிவு செய்­துள்­ளது. அதன் பய­னாக அவர்­க­ளுக்கு பங்­ளா­தேஷ் அர­சாங்­கம் அளிக்­கும் அத்­தி­யா­வ­சிய உத­வி­க­ளை­யும் சேவை­க­ளை­யும் அவர்­க­ளால் பெற முடிந்­தது. ஆனால், ஐநா திரட்­டிய தக­வல்­களை பங்­ளா­தேஷ் அர­சாங்­கம் மியன்­மா­ரி­டம் ஒப்­படைத்து விட்டதாகவும் அக­தி­களை நாடு­க­டத்­தும் நோக்­கு­டன் இவ்­வாறு செய்­யப்­பட்டதா­க­வும் தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள மனித உரி­மைக் கண்­கா­ணிப்­புக் குழு­வின் அறிக்கை கூறியுள்ளது.