தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடா­ளு­மன்­றத்தை சீக்கிரம் கூட்ட மலேசிய மாமன்னர் வலியுறுத்து

1 mins read
deec9975-3372-4381-a73e-eeb8c50d3d66
-

கோலா­லம்­பூர்: அவ­சர சட்­டங்­கள் மற்­றும் தேசிய மீட்­சித் திட்­டம் ஆகி­ய­வற்­றைப் பற்றி விவா­திக்­கும் வகை­யில் கூடிய விரை­வில் நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­ட­வேண்­டும் என்று மலே­சிய மாமன்­னர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

மலே­சிய மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா அக­மது ஷாவிற்­கும் மலாய் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும் இடை­யி­லான சிறப்பு சந்­திப்­புக் கூட்­டம் முடி­வுற்ற பிறகு வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில் இது தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கட்­சித் தலை­வர்­கள், அவ­ச­ர­கா­லத்­திற்­கான சிறப்பு தன்­னிச்சை குழு மற்­றும் அர­சாங்க வல்­லு­நர்­க­ளின் கருத்­து­க­ளைக் கேட்டு அறிந்த பிறகு, தாம் இந்த முடி­வுக்கு வந்­துள்­ள­தாக மாமன்­னர் தெரி­வித்­துள்­ளார்.

அதி­கா­ரத்­து­வத்தை எளி­மைப்

­ப­டுத்­த­வும், கூடிய விரைவில் கூட்டு எதிர்ப்புத் திறனைப் பெறும் வகை­யில் கொவிட் -19 தடுப்­பூசி திட்­டத்தை விரை­வு­ப­டுத்­து­வ­தற்­கும் தீர்க்­க­மாக செயல்­படவும் அர­சாங்­கத்­திற்கு அவர் அழைப்பு விடுத்­தார். இந்த ஆண்­டின் வர­வு­செ­லவுத் திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக சென்ற டிசம்­ப­ரில் மலே­சிய நாடாளு

­மன்­றம் கடை­சி­யாக ஒன்­று

­கூ­டி­யது.

நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இந்தச் சந்திப்பு தொடங்கியது. அதன் பிறகு மாலை 5.15 மணிவாக்கில் ஜோகூர் சுல்தான் இஸ்தானா நெகாராவில் இருந்து வெளியேறினார்.

ராணுவத் தளபதி அபெண்டி புவாங், காவல்துறை தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மற்றும் சட்டத்துறைத் தலைவர் வழக்கறிஞர் இத்ருஸ் ஹருண் ஆகியோர் உட்பட பல அரசாங்க அதிகாரிகளும் கூட்டத்திற்கு முன்பு மன்னரைச் சந்தித்தனர்.

முன்னதாக, ஜூன் 9ஆம் தேதி முதல் 18 அரசியல் தலைவர்களையும் மன்னர் சந்தித்தார்.